₹64,920 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை
வங்கிக் கடன் மோசடி வழக்குகளில் இதுவரை ₹64,920 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், “2023 பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாதவர்கள் எண்ணிக்கை 14,159 ஆக அதிகரித்துள்ளது. 1,105 வங்கிக் கடன் மோசடி வழக்குகளை அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
நடிகை கவுதமி புகார் எதிரொலி: காரைக்குடி தொழிலதிபர் வீட்டில் விடிய விடிய போலீசார் சோதனை

காரைக்குடி:தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த கவுதமி தான் சம்பாதித்த பணத்தில் தமிழகத்தின் பல இடங்களில் நிலம் மற்றும் சொத்துக்களை வாங்கியிருந்தார்.இதனை விற்பனை செய்வதற்காக குடும்ப நண்பராக இருந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்த தொழிலதிபர் அழகப்பன் என்பவருக்கு கவுதமி பவர் பத்திரம் மூலம் அதிகாரம் கொடுத்ததாக தெரிகிறது.ஆனால் அழகப்பன் கவுதமியின் சொத்துக்களை விற்று அதற்குரிய பணத்தை முழுமையாக தராமல் பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. […]
தி.மு.கவின் முன்னாள் மத்திய அமைச்சர் ஆண்டிமுத்து ராசா எம்.பி.யின் சொத்துக்கள் முடக்கம்

மத்திய அமலாக்கத்துறை ராசாவின் 15 அசையா சொத்துக்களை முடக்கி இருக்கிறது.சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் இந்த நடவடிக்கை.
“சொத்துகளின் புகைப்படம் ஆவணமாக இணைக்க வேண்டும்”

பதிவுக்கு வரும் ஆவணங்களில் பதியப்படும் சொத்துகள் குறித்த புகைப்படத்தையும் ஆவணமாக இணைக்க வேண்டும். புதிய நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என பதிவுத்துறை உத்தரவு.
சொத்துக்களை ஏலம் மூலம் வாங்கியவர்கள், அதன் விற்பனைச் சான்றிதழை பத்திரப் பதிவுத்துறையில் பதிவு செய்ய கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து வழக்கு

ஏலம் மூலம் வாங்கிய சொத்துக்களுக்கான விற்பனைச் சான்றிதழ்களை பதிவு செய்ய 11% கட்டணம் வசூலிக்கும் அரசாணையை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது – சென்னை உயர் நீதிமன்றம் முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணங்களை நிர்பந்திக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் விற்பனைச் சான்றை பதிவு செய்ய 11 % கட்டணம் வசூலிக்க அரசு அரசாணை விற்பனைச் சான்றிதழ்களை கட்டணம் செலுத்தும்படி நிர்பந்திக்காமல் பதிவு செய்ய வேண்டும். கூடுதலாக வசூலிக்கப்பட்ட முத்திரைத்தாள் கட்டணத்தை 6% வட்டியுடன் திரும்ப […]
HDFC AMC நிறுவனத்தின் சொத்து மதிப்பு உயர்வு

HDFC AMC நிறுவனத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. வழங்கப்பட்ட தரவுகளின்படி நிறுவனத்தின் லாபம் 52% அதிகரித்து சராசரி சொத்து மதிப்பு ரூ.4.86 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.477.5 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டில் ரூ.314.2 கோடியாக இருந்துள்ளது. வருவாய் 10% அதிகரித்து ரூ.574.5 கோடியாக உள்ளது.
அனிதா ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு

அனிதா ராதா கிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக தூத்துக்குடி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது. அமலாக்கத்துறையின் அடுத்த ரெய்டு கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளில் தான் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று கூறியிருந்த நிலையில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வரும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள மத்திய அரசின் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. கடந்த 2001 – 2006 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக […]
பதிவுத்துறை அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பணியாளர்கள் ஜூலை 25க்குள் சொத்து அறிக்கை தர உத்தரவு!

சார்பதிவாளர், அதற்கு மேல் உள்ள அலுவலர்கள், மற்ற பணியாளர்கள் சொத்து அறிக்கையை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க ஆணை!
பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் […]
நிலம், வீடு உள்பட சொத்துக்களின் விலை உயர்கிறது… அமலானது பதிவுத்துறை சேவைக் கட்டண உயர்வு..!
தமிழ்நாட்டில் பத்திரப்பதிவுத் துறையில் ஆவணப் பதிவு, முத்திரைத் தீர்வை, பொது அதிகார ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றுக்கான சேவைக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பத்திரப் பதிவுத் துறை சேவைக் கட்டணங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆவணப் பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தைப் பாதுகாத்தல், மின்னணு வாயிலாக ஆவண நகல் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளுக்கான கட்டணங்களை மாற்றியமைக்க முடிவு […]