தாம்பரத்தில் திமுகவினருக்கு தங்கம், வெள்ளி நாணயம் பரிசு

மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் 4ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கலந்துக்கொண்டு நலத்திட்ட உதவிகள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய திமுகவினர் 30 பேரில் 9 தங்கம், 21 வெள்ளி நாணயங்களை வழங்கினார். மறைந்த முன்னாள் நகர துணை செயலாளர் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, அவரது மகனும் மாநகர துணை அமைப்பாளர் ச.ராஜேஷ் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்சி நடைபெற்று, சிறப்பு அழைப்பாளராக […]

குமரியில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளச்சல் குறைவால் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.25-க்கு விற்கப்பட்ட தேங்காய் இன்று ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SRM கல்லூரியில் நடைபெற்ற நேஷனல் லெவல் Artification ரோபோட்டிக் சேலஞ்ச் போட்டியில் முதல் பரிசு வென்ற

Zion பள்ளி 9ஆம் வகுப்பு மாணவனும், பாரதி பிரஸ் பி.பழனி பேரனும், கார்த்திகேயன் மகனுமான கே.லக்‌ஷய் பரிசு வென்ற மாணவனை நகர காங்கிரஸ், மூத்த குடிமக்கள் மற்றும் நெல்லையப்பர் ம.போ.சி.தமிழ் பேரவை நிர்வாகிகள் வாழ்த்தினர்.

பட்ஜெட் விலையில் 5ஜி போனை அறிமுகம் செய்த இன்பினிக்ஸ்

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹாட் 50 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், 4ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி, 8 ஜிபி ரேம் 256 ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. 48MP பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் விலை ரூ.9,999க்கும், 8 ஜிபி ரேம் ரூ.10,999க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் விற்பனை வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி […]

கேரள லாட்டரி பரிசு: ரூ.25 கோடி யாருக்கு?

திருப்பூர்: திருப்பூரை சேர்ந்த நால்வர் வாங்கிய கேரள லாட்டரி சீட்டுக்கு, பம்பர் பரிசாக 25 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால், தமிழகத்தில் வாங்கப்பட்டதால் கள்ளச்சந்தையில் பெறப்பட்ட லாட்டரிச்சீட்டாக கருதி, பரிசு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. லாட்டரி சீட்டை விற்ற நபர் தலைமறைவாக உள்ளார். கேரள லாட்டரி ஓணம் பம்பர் பரிசாக, 25 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் நடந்த குலுக்கலில், ‘டிஇ 230662’ என்ற எண்ணுள்ள லாட்டரி சீட்டுக்கு 25 கோடி ரூபாய் பரிசுகிடைத்தது. திருப்பூர் […]

ஓணம் பண்டிகையை ஒட்டி பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது

விலையை கட்டுப்படுத்த தான் ஆட்கள் இல்லை என பொதுமக்கள் புலம்பல்! நாளை மறுநாள் ஓணம் பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி குமரி மாவட்டம் தோவாளையில் இரண்டு நாட்கள் சிறப்பு மலர் சந்தை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 700 டன் பூக்கள் இந்த சந்தைக்கு வந்துள்ளது. ஓணத்தின் சிறப்பு அம்சமான அத்தப்பூ கோலங்களுக்கு தேவையான வாடாமல்லி, கேந்தி,சம்பங்கி, ரோஜா, தாமரை,மரிக்கொழுந்து, செவ்வந்தி என அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயார்வு. கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கான பூ […]

இன்று முதல் சென்னையில் மட்டும் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை

விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் – அமைச்சர் பெரியகருப்பன் .