புதிய கூட்டணியா? பிரேமலதா பதில்
2026 சட்டமன்ற தேர்தலையொட்டி தே.மு.தி.க. பொதுச்செய லாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்டவாரியாக நிர்வாகிக ளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டம் முடிந்த பின்னர் பிரேமலதாவிடம், “விஜய காந்தை மையப்படுத்தி மக்கள் நலக்கூட்டணி அமைத்தது போன்று, தற்போது விஜய்யை மையப்படுத்தி 2-வது மக்கள் நலக்கூட்டணி அமைந்தால் தே.மு.தி.க. இடம்பெறுமா?” என்று நிருபர்கள் கேட்டதற்கு, […]
கூட்டணி நெருக்கடி.. மா.செக்கள் கூட்டத்தை கூட்டும் பிரேமலதா!
ஜூன் 11 – 14 வரை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, சார்பு அணி நிர்வாகிகள், பூத் ஏஜெண்டுகள் தேர்வு உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாம். NDA கூட்டணியில் இணைய தேமுதிகவுக்கு பாஜக தூது அனுப்பியதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
விஜயபிரபாகர் திட்டமிட்டு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டுள்ளார், வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி எனவும் பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

விருதுநகரில் விஜயபிரபாகர் தோல்வியடையவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார் – பிரேமலதா விஜயகாந்த். மிக மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே விஜய பிரபாகர் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தியது ஏன்? எனவும் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி.
பிரேமலதா விஜயகாந்திற்கு மத்திய அமைச்சர் ஆறுதல்

விஜயகாந்த் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மலர்தூவி மரியாதை
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக பதவி ஏற்றிருக்கும் அன்பு சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

தங்களின் கட்சிப்பணி சிறக்கவும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்”- எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச்செயலாளர். தேமுதிக பொதுச் செயலாளராக, சகோதரி பிரேமலதா விஜயகாந்த் பொறுப்பேற்றுள்ளார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பக்கபலமாக, இத்தனை ஆண்டுகள் மக்கள் பணிகளை மேற்கொண்டு வந்த சகோதரி, தமது புதிய பொறுப்பில் சிறப்பாகச் செயல்படுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தேமுதிகவை பல படிகள் முன்கொண்டு செல்ல, பாஜக சார்பாக வாழ்த்துகள்- பாஜக மாநிலத்தலைவர் […]
தமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம்
கேப்டன் நலமாக இருக்கிறார். விரைவில் முழு உடல் நலத்துடன் வீடு திரும்பி, நம் அனைவரையும் சந்திப்பார்

திருமதி. பிரேமலதா விஜயகாந்த்
தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்

தஞ்சையில் நடைபெற்றுவரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றபின் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்.. தமிழ்நாட்டில் மிகப்பெரிய மாநாடு தேமுதிக சார்பில் நடத்தப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

தேனி அல்லிநகரம் பகுதியில் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வறுமை ஒழிப்பு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் மேடையில் பேசிய அவர், விஜயகாந்த் எப்படி இருக்கிறார் என்று தான் போகும் இடமெல்லாம் கேட்கிறார்கள், விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். நம்மோடு நூறு ஆண்டு காலம் இருந்து வழிநடத்துவார். எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். நல்லவர்கள் வாழ்ந்ததாக இருக்க வேண்டுமே தவிர, […]