செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின் (30.8.2023) முகாம் அலுவலகத்தில், அண்மையில் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாவது இடத்தை பெற்று சாதனை படைத்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களை பாராட்டி ஊக்குவிக்கும் விதமாக உயரிய ஊக்கத் தொகையான 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் […]
11 ஆண்டுகளுக்கு முன்பு புதியதலைமுறை இதழுக்காக பிரக்ஞானந்தாவை பேட்டிகண்டேன்

அப்போது சென்னை ஓபன் போட்டி என்று நினைவு அதில் வென்ற ஏழெட்டு வயதேயான குட்டி பையனாக நெற்றி நிறைய விபூதியோடு குறும்புத்தனமாகப் பேசினான். பேட்டி முழுக்க அவனுடைய அம்மாதான் அதிகமும் பேசி இருப்பார். அப்போதே மகனை விட அந்த அம்மாவுக்குதான் நீண்டகால கனவுகளும் ஆர்வமும் திறமைசாலியான தன் மகனை விஸ்வநாதன் ஆனந்தைப்போல ஆக்கவேண்டும் என்கிற இலக்கும் இருந்தன. அதை அந்தப் பேட்டியிலும் சொல்லி இருப்பார். இந்தப்படத்திலும் அந்த அம்மாவின் ஆர்வத்தைப் பார்க்க முடியும். தன்னுடைய வாழ்க்கை மொத்தத்தையும் […]
செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவிற்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 லட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்த சர்வதேச செஸ் வீரர் கிரான்ட் மாஸ்டர் பிரக்யானந்தா

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி சென்னை, மீனம்பாக்கம், சர்வதேச விமான நிலையத்தில் (30.08.2023) புதன்கிழமை காலை 09.00 மணியளவில் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்த சர்வதேச செஸ் வீரர் கிரான்ட் மாஸ்டர் பிரக்யானந்தா அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
செஸ் உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

“பிரக்ஞானந்தாவின் சாதனையை கண்டு ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்கிறது” தோல்வியடைந்த போதிலும் உங்களின் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது. உங்களது வெள்ளிப் பதக்கம் வருங்கால தலைமுறைக்கு ஊக்கம் தரும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
செஸ் உலகக் கோப்பை போட்டியில் கார்ல்சன் வெற்றி முதல் சுற்றை இழந்திருந்த பிரக்யானந்தா இரண்டாவது சுற்றை ட்ரா மட்டுமே செய்ய முடிந்ததால் இம்முறை வெற்றி வாய்ப்பை இழந்து விட்டார்
உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டி : டை பிரேக்கர் முதல் சுற்றில் கார்ல்ஸன் வெற்றி.

டை-பிரேக்கரின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி, நார்வே வீரர் கார்ல்சன் வெற்றி.
செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் 2வது சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது!

டைபிரேக் போட்டி நாளை நடைபெறவுள்ளது. மகுடம் சூடப்போவது பிரக்ஞானந்தாவா? கார்ல்சனா? என்பது நாளை முடிவாகும்!
செஸ் உலக கோப்பை: முதல் சுற்று டிரா

செஸ் உலக கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகப்புகழ் பெற்ற முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன்-ம் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா-வும் மோதினர். இன்று நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இறுதிப்போட்டியான இரண்டாம் சுற்று நாளை நடைபெறுகிறது.
“உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற தமிழக வீரரும், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவிற்கு எனது பாராட்டுகள்;

இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று தமிழகத்திற்கும், நம் இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்”