கோவை பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம்

கோவை பாரதியார் பல்கலை. பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. மருதமலை சாலையில் அனைத்து முற்போக்கு அமைப்புகளின் சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்றது. ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
நீட் தேர்வுக்கு எதிராக குரோம்பேட்டையில் மதிமுக போராட்டம்

மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் குரோம்பேட்டை தாபல் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை குரோம்பேட்டை தபால் முன்பாக அருகில் மதிமுக சார்பில் மாணவ, மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான மருத்துவ நுழைவு நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக […]
கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம்

கேரள அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இடுக்கியில் முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலவரம்பு சட்ட விதியின் கீழ் கட்டடங்கள் கட்ட விதித்த தடையை விலக்கக்கோரி காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள நிலப்பிரச்னைகளுக்கு தீர்வு காணவில்லை எனவும் கேரள காங். கட்சி புகார் தெரிவித்துள்ளது. போராட்டம் காரணமாக இன்று மாலை 6 மணிவரை கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்; போக்குவரத்து எதுவும் இயங்காது என்று தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து ஆகஸ்ட் 5ஆம் தேதி பாஜக போராட்டம்

திமுக அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்டம் முழுவதும் பஞ்சாயத்து, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மாநகராட்சி என மொத்தம் 199 இடங்களில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் செம்பாக்கம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட தலைவர் செம்பாக்கம் வேத […]
குப்பை பிரச்சனை தாம்பரம் மாநகராட்சிக்கு எதிராக போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி 2,3 மண்டல குடியிருப்போர் நலவாழ்வு சங்க இணைப்பு மைய்யம் சார்பில் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 100 க்கும் மேற்பட்ட நலச்சங்க நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மழை காலத்திற்கு முன்பாக மழை நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும். 50வீடுகளுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருபோர் குப்பைகளை அவர்களே தீர்வு காண வேண்டும் என்கிற உத்திரவை மாநகராட்சி திரும்ப பெற வேண்டும். அஸ்தினாபுரம் செல்லும் ஆர்.பி சாலையை அகலப்படுத்த வேண்டும். வைஷ்ணவா […]
மணிப்பூர் கலவரம்: தாம்பரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்

மணிப்பூர் மாநில இனக்கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய, மணிப்பூர் பாஜக அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு மாவட்டம் சார்பில் தாம்பரம் பேரூந்து நிலையம் அருகே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் முருகன், மதிமுக மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன், விடுதலைச்சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் தேவ.அருள்பிரகாசம், தேசிய முஸ்லிம்லீக் மாவட்டதலைவர் அக்பர், எஸ்.டி.பி.ஐ கட்சி மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சியினர் கலந்துக்கொண்டு […]
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் மழைநீர் கால்வாய் பணிக்காக கழிவுநீர் குழாய்கள் அடைக்கப்பட்டதால் இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் ஜெயின் நகரில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெருகிறது. இதனால் குடியிப்புகள் முன்பாக தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பிகள் கட்டி கான்கீரிட் அமைக்கும் பணி தாம்பரம் மாநகரட்சி சார்பில் நடைபெறுகிறது. இதனால் வீடுகளில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் குழாய்கள் அடைக்கப்பட்டு பணிகள் நடைபெருவதால் குடியிப்போர் கழிவறைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முன்பாக தோண்டப்பட்ட பள்ளங்களில் சுவர்கள் சரிந்து விழும் ஆபத்தும் உள்ளதால் […]