சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

மாநிலம் முழுவதும் 7900 மருத்துவமனைகள், 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.

50 சதவீத பென்ஷன் கோரி ரயில்வே தொழிலாளர் போராட்டம்

கடைசி சம்பளத்தில் 50 சதவீகிதம் பென்சன் வழங்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க கோரி தாம்பரம் மின்சார ரெயில்வே பனிமனை முன்பாக 300 க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நாடு முழுவதும் 2004ல் அறிவிக்கப்பட்ட தேசிய பென்சன் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கவில்லை என கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று தாம்பரம் மின்சார ரெயில்வே பணிமனை முன்பாக எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுசெயலாளர் ஈஸ்வரலால் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் […]

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி மதுவிலக்கு கோரி போராட்டம்

தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் தலைமையில் 500 க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி ஆர்பாட்டம் நல்லாட்சி வழங்கும் தமிழகமுதல்வர் மாணவர்கள், பெண்கள், தொழில்துறை மருத்துவ கட்டமைப்பு என முன்னோடி மாநிலமாக திகழ நடவடிக்கை எடுக்கும் சூழலில் ஏழைகள், இளைஞர் சீரழிக்கும் மதுவை ஒழிக்க வேண்டும். விஷச்சாராய வழக்கில் அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளை பணி நிக்கம் செய்ய கோஷங்கள் எழுப்பினார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரிக்கை விடுத்து […]

இந்திய கூட்டணி கட்சி தலைவர்கள் போராட்டம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி,சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஃபரூக் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்பு திருச்சி சிவா, திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பு

வருவாய் அலுவலர்கள் போராட்டத்தால் தாம்பரம் பொதுமக்கள் பாதிப்பு

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 நாட்களாக தொடர் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற வந்த பொதுமக்கள் பதிப்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 நாட்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு தரப்பில் அரசு சான்றிதழ் பெறவந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் ஜிஎஸ்டி சாலையில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மறியல் போராட்டம்

தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில், ஒரு சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வையற்றவர்களுக்கு உடனடியாக ஆசிரியர்கள் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் திடீரென திரண்ட பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டடனர். இதனால் குரோம்பேட்டையில் இருந்து […]

திட்டமிட்டப்படி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் – ஜாக்டோ ஜியோ

நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கிறோம். எங்களின் கோரிக்கையை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும். நாளை மறுநாள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும். பிப்ரவரி 26ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும் – ஜாக்டோ ஜியோ. வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். நிதி நிலைமை சரியானவுடன் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தங்கம் தென்னரசு கூறியதை ஏற்க மறுப்பு.

நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியல்

நியாயவிலை கடைகளில் தேங்காய், கடலை, நல்லெண்ணெய் வழங்கக் கோரி பல்லடத்தில் விவசாயிகள் மறியலில் ஈடுப்பட்டுள்ளார். மலேசிய பாமாயிலுக்கு பதில் உள்நாட்டு எண்ணெய் விற்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளார். கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு

‛‛ விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது ” என ஹரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் சந்தேகம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசு தூண்டி விடுவதாகவும் கூறியுள்ளார்.

6 மாசத்திற்கு உணவு, பதுங்க ஆசிரமங்கள்! டெல்லி விவசாயிகள் போராட்டம்.

உளவு துறை சீக்ரெட் ரிப்போர்ட் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில், இது தொடர்பான உளவு துறை ரிப்போர்ட் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பாஜக அரசு கடந்த 2020ஆம் ஆண்டில் வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் டிச. மாதம் போராட்டத்தில் இறங்கினர். இந்த போராட்டம் சுமார் ஓராண்டு வரை நீண்டது. அதன் பின்னரே வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது இதற்கிடையே […]