குரோம்பேட்டை நியூரோதெரபி மையத்தில் குரு பூஜை

குரோம்பேட்டை, ஜெயின் நகர் 2வது தெருவில் அமைந்துள்ள “ககன் நியூரோதெரபி மைய”த்தில் குரு ஸ்ரீ லஜ்பத்ராய் மெஹ்ரா 91-ம் வருட வைபவம் குரு பூஜையாக சிறப்பாக நடந்தேறியது. அன்று காலை ஸ்ரீ கணபதி மற்றும் ஸ்ரீ தன்வந்த்ரி ஹோமமும், தொடர்ந்து மாலை நிகழ்ச்சியில், விவேகானந்தா கல்வி குழுமத்தின் கல்வி அதிகாரி சீதாராம் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு, குருவின் திருஉருவப்படத்தை திறந்து வைத்து சிறப்பு செய்தார். இத்தெரபியில் பயிற்சி பெற்ற 4 மாணவர்களுக்கு பட்டயமும், நினைவுப் பரிசும் […]
புதிய தார் சாலைக்கு பூமி பூஜை

தாம்பரம் மாநகராட்சி 30 வது வார்டுக்குட்பட்ட லட்சுமிபுரம் ராஜீவ் காந்தி தெருவில் புதியதாக அமைக்கப்படும் தார் சாலை பணியினை தாம்பரம் மாநகராட்சியின் துணை மேயர் கோ.காமராஜ் பூமி பூஜை செய்து பணியினை துவக்கி வைத்தார். உடன் கட்சி நிர்வாகிகள், ஒப்பந்ததாரர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.