பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சரின் வீடு, அலுவலகம் மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. துணை ராணுவப்படையினரின் உதவியுடன் 7 பேர் கொண்ட குழு, சென்னையில் உள்ள அமைச்சரின் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் […]

நில அபகரிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பொன்முடி விடுதலை

சைதாப்பேட்டையில் அரசுக்கு சொந்தமான 3,630 சதுர அடி இடத்தை அபகரிக்கும் நோக்கில் செயல்பட்டதாக புகார். கடந்த 1996-2001ல் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, நிலத்தை அபகரித்ததாக பொன்முடி மீது வழக்கு. குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்படவில்லை- சிறப்பு நீதிமன்றம். “அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் போதிய ஆவணங்கள் இல்லை” எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நாளை தீர்ப்பு

கடந்த 2001 ம் ஆண்டு அதிகாரத்தை பயன்படுத்தி அரசு நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து , மாமியார் பெயரில் பதிவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீது விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.