அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை. சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தில் ஆஜரான அமைச்சர் பொன்முடியிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நீடித்து வருகிறது.
“வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கை வேலூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரிப்பதற்கு தடையில்லை”

உச்சநீதிமன்றம் உத்தரவு
அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றத் தடை சட்ட வழக்கு

சென்னை எம்.பி – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. 2-வது சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் 11ம் தேதிக்கு தள்ளிவைப்பு. செம்மண் குவாரி முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை, கவுதம சிகாமணிக்கு எதிராக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி எம்.பி.க்கு எதிராக ED குற்றப்பத்திரிகை தாக்கல்

கடந்த 2012-ம் ஆண்டு அமைச்சர் பொன்முடி, கவுதம சிகாமணி, ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக கவுதம சிகாமணி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்
அமைச்சர் பொன்முடி மீதான ஊழல் குற்றச்சாட்டு அவசர அவசரமாக முடிக்கப்பட்டது

இது குற்றவாளிக்கு சாதகமான சூழலை உருவாக்கி முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே முறைகேடாக முடிக்கப்பட்ட வழக்கை தானே தானாக Suomoto வாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறேன் என்று உயர்நீதிமன்ற மாண்பமை நீதியரசர் ஆனந்த வெங்கடேசன் கூறியுள்ளார். நீதிமன்றத்திற்கு அவமானம் உண்டாக்கும் வகையில் முறைகேடு செய்துவிட்டு பொன்முடிக்கு சாதகமாக முடித்த முந்தைய நீதிபதியை சாடியுள்ளார். தற்போது இந்த வழக்கை Suomoto வாக விசாரிக்க துணிந்திருக்கும் நீதிபதி ஆனந்த வெங்கடேசன். பொன்முடி மீதான ஊழல் வழக்கில் அசிங்கமான விசாரணையால் […]
துணைவேந்தர்களுடன் அமைச்சர் பொன்முடி இன்று ஆலோசனை

அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் பொன்முடி ஆலோசனை நடத்துகிறார். மாணவர் சேர்க்கை, கலந்தாய்வு பொது பாடத்திட்டம் தொடர்பாக ஆலோசனை. தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக துணைவேந்தர்களுடன் நேற்று ஆளுநர் ரவி ஆலோசனை நடத்தினார்.
அமைச்சர் வீட்டுக்கு வங்கி அதிகாரிகள் வருகை

அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வங்கி அதிகாரிகள் வருகை பணப் பரிவர்த்தனை குறித்து வங்கி அதிகாரிகளை அழைத்து விசாரணை நடத்தும் அமலாக்கத்துறை
அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை

அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா? மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது. பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால், கர்நாடகாவில் ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும். அமலாக்கத்துறை அதிகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது – ஆர்.எஸ்.பாரதி.
அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு புனையப்பட்ட பொய் வழக்கு;

அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் விடுவிக்கப்பட்டார். அமைச்சர் பொன்முடி மீதான அமலாக்கத்துறை வழக்கை சட்டரீதியாக சந்திப்போம். சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி