பட்டமளிப்பு விழாவில் ஆளுநருடன் பங்கேற்பேன்: பொன்முடி

சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நானும் கலந்து கொள்வேன் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக கூறப்படும் விவகாரத்தில் எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளி என உத்தரவிட்டு, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை ரத்து செய்தார்

மேலும் இருவருக்கும் மூன்ற ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருந்தார்.இதையடுத்து சரணடைவதில் இருந்து விலக்கு கேட்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாக்க செய்திருந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும், அதுவரையில் அதுவரையில் பொன்முடி அவரது மனைவி சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்றும் கடந்த ஜனவரி 30ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது […]

பொன்முடியின் தண்டனையை நிறுத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சிறைத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். அதன் விசாரணையின்போது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள், உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துள்ளனர்.

சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

பொன்முடி நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதிப்பு

ஊழல் வழக்கில் மூன்றாண்டு சிறைதண்டனை பெற்ற தி.மு.க முன்னாள் மந்திரி பொன்முடி, அவரது மனைவி விசா வாட்சி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மற்றும் ஜாமீன் மனுக்கள் மீது ஜனவரி 12 ந்தேதி உச்சநீதிமன்றம் விசாரணை நடத்துகிறது

பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் மீது திமுகவினரின் குற்றசாட்டு நல்லது அல்ல…நீதிபதி ஜெயச்சந்திரன் யார்?

க.பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நாள் கழித்து தண்டனை விபரங்களை அளித்தார். அதில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரனை வழக்கம் போல் திமுக விமர்சித்துள்ளது. திமுகவினர் எப்போதும் இதுபோன்ற செயலில் இறங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து […]

எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனே இழந்த பொன்முடி: யார் இந்த லில்லி தாமஸ்?

அமைச்சர் பொன்முடி தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழக்க காரணமான மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் உட்பிரிவை நீக்கி உத்தரவை பெற்றவர் லில்லி தாமஸ் தமிழ்நாட்டின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால், தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை உடனடியாக இழந்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் அவகாசம் அளித்து தண்டனையை நிறுத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் (1951) 8ஆவது பிரிவின் உட்பிரிவுகள் […]