புதிதாக விண்ணப்பித்த பெண்களுக்கு பொங்கல் முதல் 1000 கிடைக்கும்
தமிழ்நாடு அரசு பெண்களுக்கு உரிமை தொகையை வழங்கி மூன்றாவது ஆண்டு தொடங்குகிறது தற்போது கூடுதலாக சிலருக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர் இதற்காக 18 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் உரிமை தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 56 55 வார்டு பெருங்களத்தூர் கிராமம் 77 ஆம் ஆண்டு ஏர்முனை பொங்கல் விழா 1000 மேற்பட்டவர்கள் மேற்பட்டவர்களுக்கு பரிசுகள் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ் ஆர் ராஜா அவர்களும் திருவடி காமராஜ் மண்டலகுரழு தலைவர் அவர்களும் பெருங்களத்தூர் எஸ் சேகர் பி எ அவர்களும் பரிசுகளை வழங்கினார்கள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் நேற்று ஒரே நாளில் 2.17 லட்சம்பேர் பயணித்துள்ளனர். இதுவரை 196310 பேர் சிறப்பு பேருந்துகளில் செல்ல முன் பதிவு செய்துள்ளனர்
தமிழ்நாட்டில் நாளை (ஜன.12) முதல் ஜனவரி 14ம் தேதி வரை பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பொங்கல் விடுமுறைக்குப் பின் 16, 17, 18 ஆகிய தேதிகளிலும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 4,706 சிறப்புப் பேருந்துகளும், பிற இடங்களில் இருந்து 8,478 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகள் குறித்து அறியவும், புகார் தெரிவிக்கவும் 94450 14450, 94450 14436 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோவையில் இருந்து தாம்பரத்துக்கு 16, 17 தேதிகளிலும், தாம்பரத்தில் இருந்து கோவைக்கு ஜனவரி 17, 18 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன!

தாம்பரத்திலிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு கோவை சென்றடையும். கோவையில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 5.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ₹3 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனை விவசாயிகள் மகிழ்ச்சி!
பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது – உயர்நீதிமன்றம்.

பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் – உயர்நீதிமன்றம். போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்?. இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது? போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் – உயர்நீதிமன்றம் பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைப்பு – தமிழக அரசு பதில். ஓய்வூதியர்களுக்கு […]
ஜல்லிக்கட்டு- மதுரையில் முன்பதிவு தொடக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கானமுன்பதிவு தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் காளைகள், மாடுபிடி வீரர்கள் நாளை பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் madurai.nic.in என்ற இணையத்தளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் காளை உரிமையாளருக்கும், மாடுபிடி வீரருக்கென தனித்தனியாக உள்ள பிரிவுகளில் முன்பதிவு செய்ய அறிவுறுத்தல் முறைகேடுகளை தடுக்க இணைப்புடன் டோக்கன் வழங்கப்படும்.
மாநகர பேருந்துகள் 95 சதவீதம் இயக்கப்பட்டு வருகின்றன

பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் அச்சமின்றி பயணிக்கலாம்
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்