குரோம்பேட்டை எம் ஐ டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு செயலிழப்பு பிரிவு, மோப்பநாய் பிரிவு சேர்ந்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டை சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்கு இன்று மாலை 5 மணிக்கு ஈ.மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனையடுத்துகல்லூரி நிர்வாகம் 7 மணியளவில் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் எம்.ஐ.டி கல்லூரி வளாகத்தில் இரண்டு வாசல்களிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். […]
நாகை, திண்டுக்கல்லில் குழந்தை கடத்தல் குறித்து வதந்தி பரப்பிய 5 பேர் கைது. வாட்ஸ் அப்பில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
மதுரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம்
சிவகங்கை எஸ்.பி. ஆக டோங்கரே பிரவீன் உமேஷ், மதுரை எஸ்.பி.யாக அர்விந்த், சென்னை பெருநகர காவல் அண்ணா நகர் துணை ஆணையராக ஸ்ரீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்துறை உத்தரவு
அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரித்தது. தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு என பெரியசாமி மீது வழக்கு.
பாதுகாப்பு பணியில் 5000 போலீசார்!

நேற்று காலை, சூலுாரில் இருந்து ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, மாநாடு நடக்கும் இடத்தில் ஒத்திகை பார்க்கப்பட்டது. பிரதமரின் பாதுகாப்பு நடவடிக்கைக்காக, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், திருச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 4,550 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நேற்று முன்தினமே போலீசார் வரவழைக்கப்பட்டனர்; யாருக்கு எங்கு பணி ஒதுக்குவது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு, பணிகள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன. உளவுத்துறை போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பொதுக்கூட்ட […]
தலைக்கவசம் அணியாத சப்- இன்ஸ்பெக்டருக்கு அபராதம் சேலையூர் போலீசார் அதிரடி

தாம்பரம் அருகே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட சேலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மீது அபராதம் விதித்து,ஒழுங்கு நடவடிக்கை கிழக்கு தாம்பரம் வேளசேரி சாலையில் சேலையூர் காவல் நிலைய சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் பெருமாள் செல்போன் பேசியபடி இருசக்கர வாகனத்தில், தலைகவசம் அணியாமல் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியானது. இதனையடுத்து உதவி ஆய்வாளர் பெருமாள் மீது செல்போன் பேசி கொண்டு, தலைகவசாம் அணியாமல் சென்றதாக இரண்டாயிரம் ரூபாய் அபாரத்தம் விதித்த போக்குவரத்து போலீசார், காவலர் உடையில் […]
மீண்டும் ஒரு அமலாக்க அதிகாரி கைது!
திருநெல்வேலி அமலாக்க அதிகாரி கபிலன் 2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது செய்தது சிபிஐ.
போலி பாஸ்போர்ட் பெற உதவி செய்ததாக இ சேவை முகவர் கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி மனு தாக்கல்
காவல்துறையின் உதவி இல்லாமல் யாரும் போலி பாஸ்போர்ட் பெற முடியாது, போலி பாஸ்போர்ட் பெற்ற நபர்களின் விவரங்களை சரிபார்த்த காவலர்களை ஏன் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி தனக்கும் வாடிக்கையாளருக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத நிலையில் தன்னை கைது செய்துள்ளனர்- மனுதாரர் வழக்கு விசாரணை நடைபெற்றுக கொண்டிருக்கிறது. விரைவாக வழக்கை முடிப்பதாக பட்டுக்கோட்டை டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கம் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய விசாரணை […]
வெள்ளி வியாபாரி கொலை வழக்கு… கூலிப்படை மூலம் கார் ஏற்றி கொன்ற மைத்துனர் கைது
சங்கரின் இறப்பு விபத்து என கூறப்பட்ட நிலையில் அவர் மீது கார் மோதிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.சேலம், சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பாண்டுரங்கன் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவருடைய மனைவி சொர்ணலதா (வயது 40). வெள்ளி வியாபாரியான இவர், வெள்ளி கட்டிகளை மொத்தமாக வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2ம்தேதி காலையில் பால் வாங்குவதற்காக கடைக்கு சென்று திரும்பி வந்தபோது, அந்த வழியாக வேகமாக […]
திமுக பிரமுகர் கொலை வழக்கு: மடிப்பாக்கத்தில் 3 பேர் கைது

திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் பிடி ஆணையில் உள்ள குற்றவாளி உள்ளிட்ட மூன்றுபேர் மடிப்பாக்கதில் கைது, 303 கிலோ கஞ்சா, 3 பட்டா கத்திகள், இரண்டு கார், செல்போன்கள் மோடம் பறிமுதல், பரங்கிமலை துணை ஆணையாளர் பேட்டி:- சென்னை மடிப்பாக்கம் கைவேளி பகுதியில் காவல் ஆய்வாளர் விஸ்வநாதன் தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு கார்கள் நிற்காமல் சென்ற நிலையில் அதனை விரட்டி பிடித்தனர். அப்போது அந்த காரில் மூட்டை மூட்டையாக […]