சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து – பேரன் கைது

நாமக்கல்லில் சிக்கன் ரைசில் பூச்சிமருந்து கலந்துகொடுத்து தாத்தாவைக் கொன்ற பேரன் கைது அ நாடு கல்லூரி மாணவர் பகவதி வாங்கிக்கொடுத்த சிக்கன் ரைஸை சாப்பிட்ட தாத்தா சண்முகம் உயிரிழப்பு; சிக்கன் ரைஸ் சாப்பிட்ட பகவதியின் தாய்க்கும் உடல் நலக்குறைவு; சிக்கன் ரைஸில் பூச்சி மருந்து கலந்ததற்கான காரணம் குறித்து பகவதியிடம் போலீஸ் விசாரணை

மாடியிலிருந்து விழுந்த இளைஞர் பலி மது போதையால் விபரீதம்

தாம்பரம் அருகே நண்பர்களுடன் மது அருந்திய இளைஞர் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு. சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் அர்ஜூன் (36) தற்போது வேலை இல்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று இரவு தனது நண்பர் வீட்டின் இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் நான்கு பேருடன் மது அருந்தியதாக கூறப்படுகிறது. நண்பர்கள் மது அருந்திவிட்டு அவரவர் வீட்டிற்க்கு சென்ற நிலையில் நிலைதடுமாறிய அர்ஜூன் மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார் அப்போது […]

சென்னையில் கஞ்சா, கஞ்சா சாக்லெட், போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை வஸ்துக்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

அந்த வகையில், சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த 23ம் தேதி முதல் 29ம் தேதி வரையிலான 7 நாட்களில் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக தனித்தனியாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 57 கிலோ கஞ்சா, 6,984 போதை மாத்திரைகள், 3 செல்போன்கள், ரூ.22,500, 2 லகுரக வாகனம் செய்யப்பட்டது.

சிட்லபாக்கம் புரோகிதர் வீட்டில் லாக்கருடன் 27 பவுன் கொள்ளை கால்டாக்சி டிரைவர் கைது

தாம்பரம் அருகே புரோகிதர் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 27 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் லாக்கருடன் திருடி சென்ற சம்பவம் கொலை வழக்கு குற்றவாளி மற்றும் கால் டாக்சி ஓட்டுனர் இருவரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். சென்னை சிடலப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் புரோகிதர் ரங்கராஜன் கடந்த ஐந்தாம் தேதி தனது குடும்பத்திபருடன் மயிலாப்பூரில் உள்ள தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்துவிட்டு மூன்று […]

மனைவியைக் கொன்ற கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தாம்பரம் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தாம்பரம் அடுத்த அஸ்தினாபுரம் மகேஸ்வரி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வரபிரசாதம் (60) இவர் கட்டிட வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி விசுவாசம் (50) இவரும் வேறு பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். மனைவி விசுவாசம் காலையில் வேலைக்கு சென்று மாலை நேரத்தில் வீட்டிற்க்கு வராமல் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு வந்ததால் […]

தூக்கத்தில் எழுப்பியதால் போதை டிரைவர் வெறிச்செயல் சேலையூர் முன்னாள் எஸ்.ஐ படுகொலை

சேலையூரில் சாலை தூங்கிய போதை ஓட்டுனரை தண்ணீர் தெளித்து எழுப்பிய ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் அடித்துக்கொலை. கூப்பிட்ட குரலுக்கு உதவி செய்தவர் கொலையானதால் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் சோகம் சேலையூர் ராஜா ஐய்யர் தெருவை சேர்ந்தவர் கிஷ்ணமூர்த்தி(69) ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், இவர் மனைவி ஜெயசாண்டிஸ்வரி(60), கடந்த 12ம் தேதி இரவு 8 மணியளவில் கிஷ்ணமூர்த்தி வீட்டின் அருகே குடிபோதையில் ஒருவர் சாலை படுத்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கூறியதால் டார்ச் […]

மணிமங்கலம் மாற்றுதிறனாளி குடிசை வீடு எரிந்து சாம்பல்

மணிமங்கலம் அருகே தீ விபத்தால் முற்றிலுமாக வீடு எரிந்து வாழ்வாதாரம் பாதிக்கபட்ட தாய் மற்றும் அவரின் மாற்றுதிறனாளி மகனுக்கு உதவி கரம் நீட்டிய போலீசார், அப்பகுதியினர் பாராட்டு சென்னை மணிமங்கலம் அடுத்த கரசங்கால் எல்.ஐ.சி காலணியை சேர்ந்தவர் செல்வி வீட்டு வேலை செய்து வருகிறார். இவருடைய மாற்றுதிறனாளி மகன் சதீஷ் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் திடிரென குடிசை வீடு பற்றி எரிய தொடங்கியுள்ளது. இதனை […]

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவை கைது செய்தது அமலாக்கத்துறை

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நடவடிக்கை. கவிதாவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]

டிஜிபி திரு.சங்கர் ஜிவால் பேட்டி காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் செயல் – இந்து முன்னணி கண்டனம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள திமுகவின் முன்னாள் பொறுப்பாளர் ஜாபர் சாதிக் விஷயத்தில் தமிழக அரசு நிலைத் தடுமாறியுள்ளது. இந்நிலையில் நேற்று காவல்துறை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால் அவர்களின் பேட்டி துரதிருஷ்டவசமானது. திமுக தன்னை காப்பாற்றிக் கொள்ள காவல்துறையை பலிகடா ஆக்கியுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. மேலும் டிஜிபி அவர்கள் பேட்டி அளித்த விதம் திமுகவினர் எழுதிக் கொடுத்ததைப் படித்தாரோ என் எண்ணத் தோன்றும் வகையில் திமுகவின் கருத்துக்களாகவே இருக்கிறது என்பதை சுட்டிக் […]