தனுஷ்கோடிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் சுற்றுலா பயணிகள் திரும்பிச் சென்றனர்

தனுஷ்கோடி பகுதியில் வழக்கத்தை விட காற்றின் வேகம் அதிகரித்து கடல் சீற்றத்துடன் காணப்படுவால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு சென்று சுற்றி பார்த்து செல்வது வழக்கம். காலை 8 மணிக்கு மேல் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் தனுஷ்கோடி சென்று ஆய்வுசெய்ய உள்ளனர்.

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்

சென்னையில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் மற்றும் எம்டிஎம்ஏ போதைப்பொருள்கள் பறிமுதல் நான்கு வெளிநாட்டவர் உட்பட 5 பேரை கைது செய்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை

ரெட்பிக்ஸ் யூ-டியூப் சேனலின் தலைமை ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரியை தாக்கிய வழக்கில், பாடகர் வேல்முருகன் கைது

வளசரவாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில் மதுபோதையில் வாக்குவாதம் மெட்ரோ ரயில் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக புகார் – மெட்ரோ ரயில் உதவி மேலாளர் வடிவேலு காயம் வேல்முருகனை கைது செய்து, காவல்நிலைய ஜாமினில் விடுவித்த விருகம்பாக்கம் போலீசார் ஆபாசமாக பேசுதல், தாக்குதல் நடத்துதல் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு

“போலீஸ் உதவியின்றி கஞ்சா விற்பனை நடக்க வாய்ப்பில்லை”

காவல்துறையின் உதவி இல்லாமல் கஞ்சா வியாபாரம் நடக்க வாய்ப்பில்லை. நடவடிக்கை கடுமையாக இருந்தால் கஞ்சா புழக்கமும், வழக்குகளும் எப்படி அதிகரிக்கிறது? கஞ்சா விற்பனை, கடத்தல் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன? – உள்துறை செயலர், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

சென்னை ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் சைபீரியன் ஹஸ்கி வகை வளர்ப்பு நாய் கடித்ததில் அஸ்வந்த் என்ற சிறுவனுக்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது

நாய் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து பரங்கிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது: கோவை சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சைபர் க்ரைம் போலீஸார் கைது நடவடிக்கையை மேற்கொண்டு அவரை கோவை அழைத்துச் சென்றனர். காவல் துறை அதிகாரிகள், பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அவர் மீது கோவை சைபர் க்ரைம் போலீஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் தேனி வந்திருப்பதாகக் கிடைத்த தகவலை ஒட்டி இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் தேனியில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை கோவை சைபர் க்ரைம் […]