பள்ளிக்கரணையில் ஏரியில் பாய்ந்த கார் உள்ளே இருந்த காவலாளி உயிரிழப்பு

பள்ளிக்கரணையில் கட்டுபாட்டை இழந்த கார் ஏரியில் பாய்ந்து முழுகியது. காரில் இருந்த தனியார் ஐ.டி நிறுவன பாதுகாவலர் உயிரிழப்பு. ஓட்டுனர் தப்பி கரை சேர்ந்தார் சென்னை அடுத்த சிறுச்சேரியில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் ஒப்பந்த முறையில் கார் ஓட்டுனராக பணி செய்பவர் ராஜசேகர்(33), அதே ஐ.டி நிறுவனத்தில் இரவு பாதுகாவலராக பணி செய்பவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த கெளஷல்குமார்(27), வழக்கம் போல் இரவு பணி முடித்த ஐ.டி ஊழியர்களை பாதுகாவலர் கெளஷல்குமார் பாதுகாப்புடன் ஓட்டுனர் ராஜசேகர் […]

தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனர் பதவியேற்பு

தாம்பரம் மாநகராட்சி போலீஸ் கமிஷனர் ஆக அமல்ராஜ் இருந்து வந்தார் அவர் திடீரென மாற்றப்பட்டார் அவருக்கு பதில் அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டார் அவர் இன்று முறைப்படி பதவி ஏற்றார் .அவருக்கு போலீஸ் அதிகாரிகள் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் ரவுடிகள் பட்டியல் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. அதைப் போல தாம்பரம் மாநகர பகுதிகளிலும் ரௌடிகளை கட்டுப்படுத்த புதிய போலீஸ் கமிஷனர் ஆலோசனைகளை மேற்கொண்டார்.

மாடம்பாக்கத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு பைக் கொள்ளையர் அட்டகாசம்

தாம்பரம் அருகே நடந்து சாலையில் சென்ற மூதாட்டியிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் 71 வயதான மூதாட்டி விஜயலட்சுமி. மதியம் வீட்டின் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிய போது, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியின் […]

தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]

சேலையூர் அருகே சாலையில் கிடந்த ரூ 98 ஆயிரம் போலீசில் ஒப்படைப்பு

தாம்பரம் அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த 98 ஆயிரம் பணத்தை தனியார் நிறுவன ஊழியர் சகோதர் மூலம் நாடார் சங்க நிர்வாகிகளுடன் சேலையூர் காவல் நிலையத்தில் ஓப்படைப்பு சென்னை சேலையூர் அடுத்த மப்பேடூ புதூர் நகரை சேர்ந்தவர் டானியல்(34), தனியார் நிறுவன ஊழியரான இவர் அதிகாலை பணிக்கு செல்ல வெங்கம் பாக்கம் பிரதான சாலை வழியாக சென்றார். அப்போது ஒரு சிறிய அட்டை பெட்டியில் 500 ரூபாய் தாள்கள் கட்டாக கிடந்துள்ளது. அதனை எடுத்து என்னிய போது […]

பெருங்களத்தூரில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை மோதலில் பயங்கரம்

தாம்பரம் அருகே இஸ்லாமிய அடக்கஸ்தலத்தில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு இஸ்லாமிய அடக்கதலத்தில் இரட்டை கொலை, புதுப்பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையை சேர்ந்த அண்ணாமலை(25), புத்தர் நகர் 3 வது தெருவை சேர்ந்த ஜில்லா (எ) தமிழரசன் (26) ஆகிய இருவரை கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரேதம் காரணமாக பேசும்போது ஏற்பட்ட தகறாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா […]

ரூ.10 ஆயிரம் கோடி GST மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்!

போலி பெயர்களில் நிறுவனங்களை பதிவு செய்து 10,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் கும்பலை நொய்டா போலீசார் கைது செய்தனர். போலியான நிறுவனங்களைப் பயன்படுத்தி அவர்கள் இ-வே பில்களை உருவாக்கி GST மோசடி செய்தது அம்பலம் டெல்லி, நொய்டா, காசியாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சிந்த்வாரா (எம்.பி) ஆகிய இடங்களை சேர்ந்த 45 பேர் இந்த மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். கோவையில் உலோக தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்த சுகன்யா பிரபு (40) என்பவர் […]

போதை ஆட்டோ டிரைவர் கலாட்டா போலீசை எட்டி உதைத்த விபரீதம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் குடிபோதையில் சாலை படுத்து உருண்ட ஆட்டோ ஓட்டுனர், ஓரங்கட்டி படுக்க வைத்து போதை தெளிந்ததும் பொதுமகளுக்கு இடையூறு வழக்கு பதிவு தாம்பரம் அடுத்த மாடம்பாக்கன் ஜோதி நகரில் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் குடிபோதையில் அங்குள்ள ஓட்டலில் தகறாறு செய்துள்ளார். இதனால் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் அளித்த புகாரில் சேலையூர் போலீஸ் கந்தன் உள்ளிட்டோர் சென்றனர். போலீசை கண்டதும் சாலையில் படுத்து கொம்பு சுழற்றுவதுபோல் கால்களால் போலீசை எட்டி உதைத்து அராஜகத்தில் […]

சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பெட்டாலியன் போலீசார் ஏழு பேர் மாயம் அடர்ந்த காட்டுப்பகுதியில் வழிமாறி சென்றிருக்கலாம் என சக போலீசார் வனப்பகுதிக்குள் தீவிர தேடுதல் வேட்டை கல்வராயன் மலையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, பெட்டாலியன் போலீசார் உள்ளிட்ட போலீசார், சாராயம் தயாரிக்கும் ஊறல்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்வராயன் மலையில் முகாமிட்ட சாராய வியாபாரிகளை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தடுத்தாம்பாளையம் அடர்ந்த வனப் பகுதியில் இருந்த 20 […]

குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம் தாம்பரம் போலீஸ் கமிஷனர்

குற்றங்களை தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து சிசிடிவி கேமராக்களை இயக்கி வைத்த பின்னர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் பேட்டியளித்தார். சென்னை அடுத்த குரோம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில் நடைபெறும் குற்றங்களை கண்காணிப்பதற்காக தனியார் பங்களிப்புடன் ஜி.எஸ்.டி சாலையில் அமைக்கபட்டுள்ள 75 சிசிடிவி கேமராக்களை குரோம்பேட்டை காவல் நிலையத்திலிருந்து தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ் இயக்கி வைத்தார். பின்னர் பேட்டியளித்த ஆணையர் அமல்ராஜ்:- குற்றங்களை […]