சென்னையில் 19 காவல் உதவி ஆணையர்கள் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்

செம்பியம் காவல் உதவி ஆணையர் பிரவீன் குமார் சென்னை காவல்துறை பாதுகாப்பு பிரிவு உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை பயிற்சி பிரிவு உதவி ஆணையர் முனியசாமி அண்ணாநகர் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குரோம்பேட்டை பஸ் நிலையத்தில் போதையால் தவழ்ந்து சென்ற வாலிபர்

குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் நடக்க முடியாமல் பேருந்து வரும் வழியில் தவிழ்ந்து சென்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் ஏராளமானா பொதுமக்கள் பயண்படுத்தி வருகின்றனர். தற்போது ரயில்வே தண்டவாளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பகல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யபட்டுள்ளதால் பலர் பேருந்தில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் அதிக மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் பேருந்து வரும் வழியில் படுத்து […]

டிஜிபி சங்கர் ஜிவால் பெயரில் இமெயில் மூலம் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

9 வது முறையாக சென்னை செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல். தொடர் இமெயில் மிரட்டல் சம்பவம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை.

காவல்துறையை தரக்குறைவாக பேசிய சீமான்

▪️ ‌ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் திருச்சி எஸ்.பி வருண்குமார். ▪️. இதுபோன்ற தரக் குறைவான பேச்சை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

புதையல் ஆசை காட்டி நகை மோசடி தாம்பரத்தில் பெண் கைது

தங்கப்புதையல் கிடைத்து இருப்பதாக கூறி போலி நகைகளை கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்த கர்நாடக மாண்டிய மாவட்ட கும்பலை சேர்ந்த பெண் ஒருவரை தாம்பரம் போலீசார் கைது செய்தனர் தலைமறைவாக உள்ள கும்பலுக்கு வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை தி நகர் பகுதியைச் சேர்ந்த மாற்று திறானாளியான ருக்மணி இவர் கணவர் ராமநாதன் இவர்கள் நடத்திய ஜெராக்ஸ் கடைக்கு கடந்த 14? தேதி வந்த இரண்டு ஆண் நபர்கள் சார்ஜர், ஹெட்போன் என சிறிய சிறிய பொருட்களை […]

பயிற்சி போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி அறிவுரை

காவல் துறையில் பணிகளை தாண்டி தங்கள் விருப்பம் உள்ள நற்செயலில் ஈடுபட வேண்டும். அதுபோல் செயல் மனதளவில் ஏற்ற இறக்கங்களை கடந்து செல்ல உதவும், 7 பெண்கள் உள்ளிட்ட 22 பேர் நேரடி டி.எஸ்.பி பயிற்சியை வண்டலூர் ஊனைமாஞ்சேரி உயர்காவல் பயிற்சியகத்தில் துவக்கிவைத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் பேசினார்:- வண்டலூர் அடுத்த ஊனைமாஞ்சேரியில் உள்ள உயர் காவல் பயிற்சியத்தில் 13வது பயிற்சி குழுவில் 7 பெண்கள்,15 ஆண்கள் உள்ளிட்ட 22 நேரடி டி.எஸ்.பி பயிற்சி வகுப்பை […]

சேலையூரில் தொழிலாளிகளிடம் கத்தி முனையில் வழிப்பறி செய்த 3 பேர் கைது

தாம்பரம் அருகே வடமாநில கூலி தொழிலாளர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பணம் பறித்த மூன்று பேர் கைது சேலையூர் ஐஏஎப் சாலை, ரிக்கி கார்டன் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் தீனதயாளன் (24) என்பவர்மேஸ்திரி வேலை செய்து வருகிறார்.இவர் நேற்று சேலையூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார்.அதில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் உள்ளே வந்து கத்தியை […]

ரவுடிகளை ஒழிக்க ஆக்‌ஷனில் இறங்கிய சென்னை காவல் ஆணையர் அருண்!

பொது மக்கள் பார்க்கும் வகையில், போலீஸ் அதிகாரிகள் தினமும் இருமுறை ரோந்து சுற்றி வர வேண்டும். சட்டம் ஒழுங்கு தொடர்புடைய 2 கூடுதல் காவல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள் உட்பட காவல் உயர் அதிகாரிகள் போலீசாரின் ரோந்து பணிகளை நேரடியாக கண்காணிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு! பணியில் சுணக்கம் காட்டும் போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிடை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளார்.

டிஜிபி உத்தரவு:

தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் டிஎஸ்பி -க்கள் வரை கைத்துப்பாக்கியை உடன் வைத்திருக்க வேண்டும். லத்தி, துப்பாக்கிகளை எந்த நேரத்தில் எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இனி, காவல் நிலைய பொறுப்பு அலுவலர்கள் (SHO), இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி-க்களின் பணித்திறனுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கப்படும்.