நீலாங்கரையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக் கொலை

சீசிங் ராஜா என்கவுன்டர் … பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் பதுங்கி இருந்த ரவுடி சீசிங் ராஜா நேற்று தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று போலீசாரால் என்கவுண்டர் செய்ய பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது …. கைது செய்யப்பட்ட சீசிங்கு ராஜா ஆந்திராவிலிருந்து சென்னைக்கு அழைத்து வரும்போது போலீசாரை தாக்கி விட்டு தப்ப செல்ல முயன்றதாக கூறபடுகிறது. இந்நிலையில் ரவுடி சீசிங்கு […]
சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள்

சென்னையில் இன்று அதிகாலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள் “செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே” என கதறி அழுத மகள் ராயப்பேட்டை பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா என்கவுன்ட்டர்

▪️. போலீசாரிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக தகவல். தலைமறைவாக இருந்த அவர் கடப்பாவில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.. என்கவுன்ட்டர் செய்யப்பட்ட அவர் மீது 5 கொலை உட்பட 33 வழக்குகள் நிலுவையில் உள்ளன..
பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்தவர் அடித்துக் கொலை

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு தகவல் அளித்த நபரின் தலையில் குழவிகல்லை போட்டு கொலை, கொளையாளிகள் குறித்து போலீசார் விசாரணை சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன்(29) இவருக்கு செளந்தர்யா எனகிற மனைவி ஒருமகன், ஒருமகள் உள்ளனர். ஏற்கனவே கொலை வழக்கு கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடூ குற்றவாளி இந்த நிலையில் இவரின் வீட்டருகே சில கஞ்சா விற்பனை […]
சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்..!!

ஜெ.ஜெ. நகர் டிவிஎஸ் நிழற்சாலையில் உள்ள தனியார் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
அரசுப் பள்ளியில் சர்ச்சை பேச்சை பேசிய மகா விஷ்ணுவின் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

திருப்பூரில் உள்ள மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் நேற்று போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரை மீண்டும் சென்னை அழைத்து வருகின்றனர்.
கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தியதாக 14 அதிகாரிகள் மீது வழக்கு
வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட 14 அதிகாரிகள், காவலர்கள் மீது வழக்குப்பதிவு. பிறருக்கு காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோத சிறைவைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது சிபிசிஐடி.
விருதுநகர் மாவட்டம் அருப்புக் கோட்டையில் இரு நாட்களுக்கு முன்பு, போராட்டத்தில் பெண் டி.எஸ்.பி. தாக்கப்பட்ட சம்பவத்தில் தலை மறைவாக இருந்த மேலும் ஒருவர் கைது
ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 வருடமாக ஸ்கூட்டர் மட்டுமே திருடி ஆசாமி கைது 64 வாகனங்கள் பறிமுதல்

கியர் வண்டி ஓட்ட தெரியாத திருடன், கியர் இல்லாத ஸ்கூட்டி பெப் வாகனங்களை மட்டும் 50 வயதில் திருட தொடங்கி 60 வயதில் சென்னை மற்றும் புறநகரில் 64 வாகங்களை திருடிய நிலையில் சிறைசென்றான். தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் இருசக்கர வாகனங்கள் அதிக அளவு திருடு போன நிலையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடிவந்தனர். குறிப்பாக பார்கிங் அல்லாத பொது இடங்களில் நிறுத்தும் ஸ்கூட்டி பெப் என்கிற வகை இருசக்கர வாகனங்கள் தொடர்சியாக அதிக அளவு திருடு […]
காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் போலீஸ் கொலை: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார். கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார். […]