வாணியம்பாடியில் காவல் நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த உதவி காவல் ஆய்வாளர் நள்ளிரவு காவல் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி
பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரிடம் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவத்தால் காதல் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என டி.எஸ்.பி விஜயகுமார் விசாரனை
ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

பண்ருட்டி அருகே சின்ன ஒடப்பன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (61). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் தனது மனைவி வளர்மதியுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று மதியம் தனது உறவினர் நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு பாச்சாரபாளையம் கிராமத்திற்கு சென்று இருந்தனர். பின்னர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் வாரண்டாவில் மறைத்து வைத்து இருந்த சாவி எடுத்து பிரோவில் இருந்த […]
காவலர்கள் நலன் காக்க Whatsapp குழு உருவாக்கி செயல்பட வேண்டும்… டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…

”Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் டிஜிபி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும். அதன்பின் துணையான இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், […]
தாம்பரம் மாநகராட்சி பகுதியில் கஞ்சா விற்றதாக 182 பேர் கைது

பல்லாவரம் தனியார் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி தாம்பரம் காவல்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 18 ல் இருந்து 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் 182 நபர்கள் போதைப் பொருள்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாணவர்களை […]
நுங்கம்பாக்கத்தில் மணி என்பவரின் சாலையோர காய்கறி கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2பேர் கைது

நுங்கம்பாக்கத்தில் மணி என்பவரின் சாலையோர காய்கறி கடையில் கள்ள நோட்டு மாற்ற முயன்ற 2பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டு மாற்ற முயன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியன் (62), முன்னாள் ராணுவ வீரர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர்களிடம் இருந்து ரூ. 45 லட்சத்திலான கள்ள நோட்டு, நோட்டு அச்சிட பயன்படுத்திய இயந்திரங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்ற 3பேர் கைது

பல்லாவரம் ரேடியல் சாலையில் கஞ்சா விற்பனையில் நடைபெறுவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் பல்லாவரம் ரேடியல் சாலை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது போலீசாரை கண்டதும் டிப் டாப்பாக நின்று கொண்டிருந்த ஆசாமி ஒருவர் போலீசாரை பார்த்ததும் ஓட துவங்கினார். அவரை துரத்தி பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவரிடம் சோதனை மேற்கண்ட போது 100, கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவரை பல்லாவரம் காவல் […]
சென்னை பல்லாவரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

கைதானவர்களின் விஷ்னு (27) என்பவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில், பகுதி நேர வேலையாக கஞ்சா விற்று வந்துள்ளார். 1.2 கிலோ கஞ்சா பறிமுதல் இதேபோல, அனகாபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்று வந்த அஜய் (21), செல்வம் (28) இருவரும் கைது. 1.3 கிலோ கஞ்சா பறிமுதல்
நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே யாக்கோபுரம் பேருந்து நிலையத்தில் செல்வன் (35) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்வன் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக முதல்வர் உத்தரவை மீறிய காவல்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தமிழக காவல்துறையில் உள்ள காவலர் முதல் நுண்ணறிவு காவலர்கள் வரை வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் உயர் அதிகாரிகள் யாரும் கீழே இருக்கும் காவலர்களுக்கு விடுமுறை அளிப்பது கிடையாது. மேலும் சென்னை முழுவதும் உள்ள நுண்ணறிவு பிரிவு காவலர்களுக்கு இந்த விடுமுறை சுத்தமாக தருவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வடசென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர் இரண்டாவது மாடியில் இருந்து தற்கொலைக்கும் முயற்சி செய்தார். மேலும் […]
கூடுவாஞ்சேரி அருகே இன்று 2 ரவுடிகள் சுட்டுக்கொலை. போலீஸ் அதிரடி என்கவுண்டர்

சென்னை அருகே செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் இன்று அதிகாலை போலீசார் என்கவுண்டர் தாக்குதல் நடத்தினர். கூடுவாஞ்சேரி பகுதியில் புதுச்சேரி சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது. இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்தது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது. அப்போது, ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். […]