சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – நீதிபதி ஆவேசம்
போதைப்பொருள் கடத்தல் வாகனங்களை கையாள சிறப்பு அதிகாரி நியமனம் செய்ததற்கு காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் கடத்தியதாக 3688 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 710 வாகனங்கள் நீதிமன்றம் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 191 வாகனங்களுக்கான வழக்கு நிலுவையில் உள்ளது. 2787 வாகனங்களுக்கு யாரும் உரிமை கோரவில்லை; இதனை ஏலம் விட நடவடிக்கை – உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் டி.ஜி.பி அறிக்கை
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச காரணம் என்ன? – போலீஸ் காவலில் கருக்கா வினோத் அளித்த வாக்குமூலத்தால் பரபரப்பு

“சிறையில் இருந்த போது நீட் தற்கொலை தொடர்பான செய்திகளை படித்த போது மன உளைச்சல் ஏற்பட்டது “ “ஆறாம் வகுப்பு படிக்கும் தன் மகனை மருத்துவ கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற ஆசை உள்ளது” “நீட் தேர்வு இருந்தால் தன் மகனின் மருத்துவ கனவு பறிபோகும் என்பதால் பெட்ரோல் குண்டு வீசினேன்” “பிஎப்ஐ அமைப்பினருக்கும், தனக்கும் எந்த தொடர்புமில்லை “ “10 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என்றும் கருக்கா வினோத் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காலி கிராமத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 13 பேர் கைது

கோவில் புதுப்பிப்பு பணியின் போது வெடித்த மோதலால் ஆதி திராவிட குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளுக்கு தீ வைப்பு. ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. இரு பிரிவுகளைச் சேர்ந்த 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் 13 பேர் கைது.
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருவம் பகுதியில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இளைஞர் தற்கொலை

அடிதடி தகராறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அழைத்த நிலையில், பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
விசாகப்பட்டினத்தில் வாஷிங் மிஷினில் கடத்திய ரூ.1.30 கோடி பறிமுதல் செய்யப்பட்டது

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் விமான நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சரக்கு ஆட்டோவில் புதிய வாஷிங் மிஷன்கள் கொண்டு செல்வதை பார்த்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில் 6 வாஷிங் மிஷின்கள் புதிதாக ‘சீல்’ பிரிக்காமல் காணப்பட்டது. இதுகுறித்து போலீசார் டிரைவரிடம் விசாரணை செய்தனர். இதில், விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா கொண்டு செல்வதாக கூறினார். விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடாவுக்கு வாஷிங் மெஷின்கள் ஆட்டோவில் கொண்டு செல்லப்படுமா?, என சந்தேகமடைந்த போலீசார் […]
ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை பணம் கொள்ளை வாலிபர் கைது

ஓடும் ரயிலில் வெள்ளி வியாபாரியிடம், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தவரை, தனிப்படை போலீசார் 2 மாதங்களுக்கு பிறகு கைது செய்தனர். சென்னை புரசைவாக்கம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (44), வெள்ளி வியாபாரி. இவர், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி இரவு, பெங்களூருவில் இருந்து வெள்ளி பொருட்களை வாங்கிக் கொண்டு, சென்னைக்கு அரக்கோணம் வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்த படுக்கை வசதி கொண்ட பெட்டியில் பயணம் செய்தார். அப்போது, ரூ. 4 லட்சம் […]
நீதிபதியுடன் மோதல் – காமெடி நடிகர் கைது!

நடைப்பயிற்சியின் போது நீதிபதியை வம்பிழுத்து அடிக்க முயன்றதாக புகார். காமெடி நடிகர் ஜெயமணி , அவரது நண்பரை கைது செய்த கிண்டி போலீசார்.
குரோம்பேட்டை நகைக்கடை திடீர் மூடல் 150 பேர் பணம் அம்போ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு. போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
பல்லாவரம் பள்ளியில் சாலை பாதுகாப்பு ஓவியப்போட்டி

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் காப்பாளர் சார்பில் பல்லாவரம் தெரேசா பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த 134 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் மாணவர்களின் ஓவிய போட்டியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு போக்குவரத்து காவல் முதன்மை காப்பாளர் கருப்பையா, […]