போதைப்பொருள் புழக்கத்துக்கு உடந்தை; சென்னையில் 22 காவலர்கள் மீது பாய்ந்த நடவடிக்கை
6 உதவி ஆய்வாளர்கள், 2 தலைமை காவலர்கள், 14 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் கஞ்சா, குட்கா போதைப்பொருள் புழக்கத்தை தடுக்காமல் உடந்தையாக இருந்த புகாரில் அதிரடி
தீபாவளி பண்டிகை- சென்னையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 581 வழக்குகள் பதிவு

அதிகளவு சத்தத்தை எழுப்பக்கூடிய பட்டாசுகள் வெடித்ததாக மொத்தம் 19 வழக்குகள் பதிவு அரசு விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனையில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் பதிவு – காவல்துறை தகவல்.
டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோ தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார்

தியாகராய நகரில் உள்ள ஒரு திரையரங்கில் ஜிகர்தண்டா-2 படம் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு. திரையரங்கில் அதிக சத்தம் போட்ட 6 பேரை தட்டிக் கேட்டதால் அமைச்சர் மகன் ரமேஷ் மற்றும் பேரன் மீது தாக்குதல். காயமடைந்த அமைச்சரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதி.
சென்னையில் உள்ள தனியார் துணிக்கடைகளில் திருடிய புடவைகளை காவல்நிலையத்துக்கு திருப்பி அனுப்பிய ஆந்திர பெண்கள்

சிசிடிவி காட்சியில் புடவை திருடியது அம்பலம் – போலீசார் ஆந்திராவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் திருப்பி அனுப்பி வைத்தனர்
திண்டுக்கல்லில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார வாரிய துறையில் நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை. நேற்றைய தினம் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மின்வாரிய நிர்வாக பொறியாளர் ஆக பணிபுரியும் காளிமுத்து வீட்டில் தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.
சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது

சென்னை வடபழனி பகுதியில் போலீஸ் சீருடையில் பொதுமக்களிடம் பணம் பறித்த நபர் கைது செய்யப்பட்டார். அஸ்வின் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் போலி சீருடை, போலி அடையாள அட்டை, பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
தாம்பரத்தில் பெண்களிடம் பாலியல் தொல்லை கார் டிரைவர் கைது

சென்னை கிழக்கு தாம்பரம் இரும்புலியூரில் உள்ள பழைய எம்.இ.எஸ் சாலை, முருகன் தெரு, வீரபத்திரன் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக நள்ளிரவு நேரத்தில் மர்ம ஆசாமி ஒருவன் வீடுகளை நோட்டமிடுவதும்,தனியாக இருக்கும் பெண்களை வீட்டின் உள்ளே நுழைந்து கத்தியை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனால் பதற்றம் இருந்து வந்த நிலையில்போலீசார் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் பொருத்தபட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்த போது […]
மூதாட்டியிடம் நகை திருட்டு வீட்டை சுத்தம் செய்ய வந்தவர் கைது

சென்னை தாம்பரம் அடுத்த கேம்ப்ரோடு பராசக்தி நகரை சேர்ந்தவர் ராசாத்தி (77) இவரின் வீட்டை சுத்தம் செய்வதற்காக ராஜாஜி நகரை சேர்ந்த முனியப்பன் என்பவர் நேற்று காலை வந்துள்ளார். அப்போது வீட்டில் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்த முனுசாமி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தங்க நகை மற்றும் காதில் இருந்த கம்மல் ஆகியவற்றை பறித்துவிட்டு அருகில் இருந்த சாக்கடையில் தள்ளிவிட்டு தப்பி சென்றுள்ளார். சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து […]
சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – உயர்நீதிமன்றம்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறை கடமை தவறிவிட்டது – சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி. எந்த கொள்கைக்கும் எதிராக பேசுவதற்கு நீதிமன்றம் அனுமதிக்காது – உயர்நீதிமன்றம் “அதிகாரத்தில் உள்ளவர்கள் பொதுநிகழ்ச்சிகளில் பேசும்போது, சாதி, மதம், கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனத்துடன் பேச வேண்டும்” “குறிப்பிட்ட கொள்கையை ஒழிக்க வேண்டும் என பேசுவதற்கு பதில், மது, போதைப்பொருட்கள், ஊழலை ஒழிப்பதில் அமைச்சர்கள் கவனம் செலுத்தலாம்” திராவிடக் கொள்கைக்கு எதிராக கூட்டம் நடத்த அனுமதி கேட்டு திருவேற்காடு பகுதியைச் […]