ஆருத்ரா கோல்ட் டிரேடிங் மோசடி விவகாரத்தில், அந்நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜசேகரை தமிழ்நாடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கையின் அடிப்படையில் துபாயில் கைது!

ஆருத்ரா வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த ராஜசேகருக்கு லுக்அவுட் நோட்டீஸ் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது!
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் விருப்ப ஓய்வு!

அடுத்த ஆண்டு மே மாதத்துடன் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், விருப்ப ஓய்வு கேட்டு தமிழ்நாடு டிஜிபியிடம் மனு அளித்திருந்த நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது! விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஷசாங்சாய்க்கு கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

போலீசார் ,வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
வெளிநாட்டினர் தவறவிட்ட பணத்தை ஒப்படைத்த தாம்பரம் ஆட்டோ டிரைவரின் நேர்மை

தொண்டை புற்றுநோய் சிகிசைகாக விமானம் மூலம் சென்னை வந்த நோயாளி உள்ளிட்ட 3 பேர் அதிகாலை ஆட்டோவில் சென்று குரோம்பேட்டையில் இறங்கி சென்றனர். அதே வேலையில் அவர்களில் பாஸ்போர்ட், ஒரு லட்சத்து 40 ஆயிரம் பணத்தை ஆட்டோவில் தவறவிட்டு சென்றனர். இது குறித்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்த போதே ஆட்டோவை ஓட்டி சென்ற ஓட்டுனர் தாம்பரம் கடப்பேரியை சேர்ந்த ரவி என்பவர் சம்மந்த பட்ட நபருக்கு செல்போன் மூலம் […]
சென்னை மாநகர காவல் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் வழிப்பறி மற்றும் வாகன திருட்டில் ஈடுபட்டதாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்
அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள் மற்றும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகர காவல் எல்லையில் தொடர் வாகன திருட்டு மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை கைது செய்ய, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவுப்படி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் சென்னை முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 19ம் தேதி முதல் 25ம் தேதி வரையிலான, 7 நாட்களில் வீடுகள் முன்பு […]
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி, சென்னையில் 15 காவல் ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு
சென்னையில் காவல்துறை ஆய்வாளர்கள் மாற்றம்!
திருச்சி மாவட்டம் சனமங்கலம் அருகே ரவுடி கொம்பன் ஜெகன் போலீசாரின் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

காவல் உதவி ஆய்வாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றபோது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் என்கவுண்டர் செய்யபட்ட ஜெகன் மீது 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன
அமெரிக்காவில் சட்டவிரோதமாக புலம் பெயர்வதற்காக லாரி டிரெய்லருக்குள் அடைத்து, அழைத்து வரப்பட்ட 215 பேரை மெக்சிகோ போலீசார் மீட்பு
ரெயிலில் பெண்ணிடம் பாலியல் தொல்லை தாம்பரம் போலிஸ்கார் கைது

சென்னை கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கபிலா என்ற பெண் பெருங்களத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 14ஆம் தேதி அன்று கிண்டி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்தப் பெட்டியில் பயணம் செய்த ஆண் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை திடீரென காண்பித்துள்ளார். அதை சற்றும் எதிர்பாராத அப்பெண் அதிர்ச்சி அடைந்து தனது செல்போனில் […]