தமிழகம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் நெல்லூரில் மீட்பு!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே காணாமல் போன 3 பள்ளி சிறுவர்கள் ஆந்திரா மாநிலம் நெல்லூரில் மீட்கப்பட்டனர். செரப்பணஞ்சேரி பகுதியில் அரசுப்பள்ளியில் பயின்ற 6ம் வகுப்பு மாணவர்கள் மாயமான நிலையில் காவல்துறையினர் அவர்களை மீட்டனர்.

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்துமீறி நுழைந்த இருவர் கைதான நிலையில், அவர்கள் வீசிய மஞ்சள் நிற புகை கொண்ட புகை பட்டாசுகளை வீசிய நிலையில், அது தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது

பேக்கரியில் ஆயிரம் ரூபாய் மாமூல், தாபாவில் ஓசி சாப்பாடு, இறைச்சிக் கடை உரிமையாளருக்கு வெட்டு என கஞ்சா போதையில் அடுத்தடுத்து அட்டூழியம் செய்த ரௌடிகள் மூன்றுபேரையும் கைது செய்தது போலீஸ்

திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் அருகேயுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த மயில்வேல் என்பவர் கடந்த ஏழாம் தேதி, சத்தரைக் கிராமத்திலுள்ள குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மயில்வேலின் இறுதி ஊர்வலத்தையொட்டி, அவரின் அண்ணன் மகனும் ரௌடியுமான பாபா என்கிற வினோத் மற்றும் இவரின் கூட்டாளிகளான முகிந்தர், பிரவீன்குமார் ஆகிய மூன்றுபேரும் சேர்ந்து, கஞ்சா போதையில் அப்பகுதியிலுள்ள கடைகளை அடைக்குமாறு, அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

திருவள்ளூரில் அடாவடிதனம் செய்த ரவுடிகளை பிடித்து சிறப்பு செய்த காவல் துறை

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு பகுதியிலுள்ள ஸ்வீட்ஸ் பேக்கரி கடையொன்றில், பட்டாக் கத்தியைக் காட்டி ஆயிரம் ரூபாய் மாமூல் வாங்கிச்செல்லும் ரௌடிகளின் மிரட்டல் சி.சி.டி.வி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து ரௌடிகளை கைது செய்தனர் காவல்துறையினர். போலீசார் பிடிக்க முற்பட்டபோது தப்பி ஓடிய ரவுடிகள் வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளி ராஜசேகரை துபாயில் இருந்து அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அங்கு செல்ல உள்ளனர்

ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு நீதிமன்ற அனுமதியுடன் சென்னை அழைத்து வர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் குழு துபாய் செல்கிறது. வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் ஏற்கனவே துபாய் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நடிகர் ஆர்.கே.சுரேஷ், துபாயில் இருந்து நேற்று சென்னைக்கு வந்தார். நாளை அவரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

செல்போன் திருட்டு

ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் செல்போன்களை திருடிய 5 கொள்ளையர்களை நாக்பூர் சென்று கைது செய்த போலீசார்

கருக்கா வினோத்தை காவலில் விசாரிக்க மனு

சென்னையில் ஆளுநர் மாளிகை முன்புபெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில்வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

லஞ்ச பணத்தை அங்கித் திவாரியுடன் பங்கிட்ட 7 அமலாக்கத்துறை அதிகாரிகள்! லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியுடன் 7 உயர் அதிகாரிகள் லஞ்ச பணத்தை பங்கிட்டு கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளரிடம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.20 லட்சம் லஞ்சமாக வாங்கிய போது, அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரிடம் போலீசார் கைதான அன்று நடத்திய விசாரணையில், அங்கித் திவாரியுடன் 7 அதிகாரிகள் சேர்ந்து, அவர் இதற்கு முன்பு […]

பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்திருப்பதாக கூறி அரசு ஊழியரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி

இதுபோன்று பலரை மிரட்டி லஞ்சம் பெற்று சக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. இன்று நடைபெற்ற சோதனைகளில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. மதுரை மற்றும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் பலருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட அக்கி திவாரி வீடு அலுவலகம் மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் சோதனை நடத்த நடவடிக்கை- லஞ்ச புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்து குறித்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிக்கை

லஞ்ச பணத்தில் சக அதிகாரிகளுக்கு பங்கு

லஞ்சம் பெற்ற போது கையும் களவுமாக சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் சுமார் 15 நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை அங்கித் திவாரி இது போன்று பல நபர்களை மிரட்டி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்து சக அதிகாரிகளுக்கு பங்கு பிரித்து கொடுத்துள்ளார் – லஞ்ச ஒழிப்புத்துறை