பா.ஜ.க. பெண் நிர்வாகி ஒருவரின் மண்டையை உடைத்ததாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
தலைமறைவாகியுள்ள தமிழக பா.ஜ.க நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கைது செய்ய தனிப்படை போலீசார் குஜராத் விரைந்துள்ளனர்
சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு

காஞ்சிபுரம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. போராட்டத்தில் பங்குபெற்ற பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு சவுக்கு சங்கரை கைது செய்ய சுங்குவார்சத்திரம் போலீசார் நடவடிக்கை
அயோத்தியில் 3 பேர் கைது

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ள நிலையில் உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கைது செய்து விசாரணை..!
சேலத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது!

சேலம் பெரியார் பல்கலைக்கழக மோசடி வழக்கில் ஜாமினில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதனை, ஆளுநர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவற்கு மாணவர் இயக்கங்கள் எதிர்ப்பு!
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் சோதனை!

முறைகேடு புகாரில் கைதாகி ஜாமினில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு தொடர்பான பல்வேறு ஆவணங்களை கைப்பற்றி, அதன் மீது விசாரணை நடத்தியது குறித்து இன்று 6 இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்!
“சிவில் பிரச்சனையில் போலீசார் தலையிடக்கூடாது”

சிவில் பிரச்சனைகளில் போலீசார் தேவையில்லாமல் தலையிடக்கூடாது – ஏடிஜிபி அருண் சுற்றறிக்கை எஃப்.ஐ.ஆர், சி.எஸ்.ஆர், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் உள்ளிட்டவை இன்றி எந்தவொரு மனுக்கள் மீதும் காவல்துறை எந்த விசாரணையும் நடத்தக்கூடாது பணத்தகராறு, சொத்துத்தகராறு, வழித்தட தகராறு போன்ற சிவில் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சயானிடம் சிபிசிஐடி போலீசார் நாளை மீண்டும் விசாரணை

ஜாமினில் உள்ள சயானுக்கு, நாளை கோவை அலுவலகத்தில் ஆஜராகுமாறு கடந்த 5ஆம் தேதி சம்மன் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கபட்டுள்ள பிஜின்குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் தகவல் பரிமாற்ற விபரங்கள் ஏற்கனவே மீட்பு.
மேம்பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

ஈ.சி.ஆர் முட்டுகாடு மேம்பாலம் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றவரை கானத்தூர் போலீசார் தடுத்து காபாற்றி மனமாற்றி உறுதி மொழி பெற்றனர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற விஜயகுமார்(46) என்பவரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கானத்தூர் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் அங்கு கானத்தூர் ஆய்வாளர் பார்த்தசாரதி தற்கொலை என்பது பாவச்செயல் என்பதை எடுத்துறைத்து அவரை குடும்பம் […]
காவல் நிலைய மரணம் – பிரேத பரிசோதனை செய்க”
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, காவல் நிலையத்தில் மரணமடைந்த பாலகிருஷ்ணன் உடலை கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஈரோடு எஸ்.பி., பெருந்துறை டி.எஸ்.பி-யின் தனிப்படை போலீசார், ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று கொடூரமாக தாக்கியதால் பாலகிருஷ்ணன் மரணம் என சகோதரர் வழக்கு பிரேத பரிசோதனையை வேறு அரசு மருத்துவமனையில் நடத்தி, அதனை வீடியோ பதிவு செய்யவும், நியாயமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் […]