போலீஸ் அதிகாரிகளை எதிர்த்து பேசி டிஎஸ்பி சஸ்பெண்ட்
தஞ்சை மாவட்டத்தில் டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசன் தனது காரை அமைச்சருக்காக கொண்டு சென்றதாகவும் அதிகாரிகள் தனக்கு எதிராக இருப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் பரபரப்பாக குற்றச்சாட்டு தெரிவித்தார் அப்போது அவர் 1200 மதுவிலக்கு வழக்குகளை போட்டிருப்பதாகவும் 700 பேர் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார் அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததற்கு போலீஸ் வேறு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர் அவர் சொன்னதில் எதுவும் உண்மை இல்லை என்று கூறி அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளனர்
பெண் போலீசார் லிப்ஸ்டிக் போட தடை
பெண் போலீசார் வேலை நேரத்தில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக் பவுடர் ஆகியவற்றை போடக்கூடாது என்று பீகார் மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. பெண் போலீசார் பணி நேரத்தின் போது சீருடையில் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் பூசிக்கொண்டும் ‘ரீல்ஸ்’ செய்யும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. பணி நேரத்தில் சீருடைகளை முறையாக அணிய வேண்டும். மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் […]
அஜித்குமாரை அடிக்க உத்தரவிட்ட போலீஸ் அதிகாரி யார்?
பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீசாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, போலீஸ் சூப்பிரண்டுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் போலீஸ் துணை சூப்பிரண்டை தொடர்பு கொண்டு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுவிட்டாலும், தமிழக காவல்துறையை சீர்திருத்த இத்தகைய அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக […]
அஜித்குமார் கொலை:வீடியோ எடுத்த வாலிபருக்கு போலீஸ் பாதுகாப்பு
திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரை தனிப்படை போலீசார் தாக்கும் காட்சியை வீடியோ எடுத்த சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிமாவட்ட போலீசார் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபிக்கு ஆன்லைனில் சக்தீஸ்வரன் மனு அளித்திருந்த நிலையில் துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக கட்சி அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது*
திண்டுக்கல், எரியோடு, கடைவீதி பகுதியில் அமைந்துள்ள அதிமுக பேரூர் கழக அலுவலகம் இன்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த வேடசந்தூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். எரியோடு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
ஆள் கடத்தல் வழக்கு .
ஏடிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து சென்னையில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை கைது செய்தனர்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது உச்ச நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்தது.மாநில அரசு வேண்டுமானால் சஸ்பெண்ட் செய்யலாம் ஆனால் உயர் நீதிமன்றம் ஹஸ்பண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கத்தில் தீவிபத்தில் முழுவதும் எரிந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8லட்சத்து 35 ஆயிரம் பணம் எரியாமல் தப்பியது அதிகாரிகள் முன்னிலையில் இயந்திரம் உடைத்து திறந்து பார்த்த அதிகாரிகள் மகிழ்ச்சி
சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் அண்ணா தெருவில் எச்.டி.எப்.சி வங்கி ஏ.டி.எம் மை 19ம் தேதி யில் சிசிடிவி பழுது பார்க்க பிரகாஷ் என்கிற ஊழியர் ஈடுபட்டார், அப்போது ஏ.சி உள்பகுதி இயந்திரத்தில் தீபற்றியதால் பிரகாஷ் வெளியேறினார், தீயணைப்பு வாகனத்தில் தீயை அணைத்த நிலையில் ஏ.டி.எம் முழுவதும்ம் எரிந்தது, மேலும் கட்டிட உள்பகுதி முழுவதிலும் சேதமானது, எச்.டி.எப்.சி வங்கி சார்பில் அந்த ஏ.டி.எம் இயந்திரத்தில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 500 ரூபாய் இருக்க வேண்டும் ஆனால் […]
ரூ. 1000 லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் நீக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பத்திர பதிவு அலுவலக அருகே சிந்தாரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வியாபாரி முஷாமல் முகமது என்பவர் படப்பை அருகே ஒரு இடத்தை வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக தான் கொண்டு வந்த கார் டிக்கியில் 6 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு.பத்திரபதிவு அலுவலகத்திற்குள் சென்று தன் வாங்கிய இடத்திற்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது காரின் டிரைவர் கண்ணாடி உடைக்கப்பட்டு காரின் டிக்கி திறக்கப்பட்டு அதிலிருந்து 6 லட்ச ரூபாய் பணத்தை திருடி […]
ஒரே நாளில் பதவி உயர்வு பெற்ற IPS ஜோடி
. IPS ஜோடியான வருண்குமார், வந்திதா பாண்டே இருவரும் ஒரே நாளில் DIGஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ▪️. 2011 பேட்ச்சை சேர்ந்த இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அருகருகே உள்ள திருச்சி – புதுக்கோட்டை மாவட்டங்களில் SPக்களாக பணியாற்றி வந்த நிலையில், இனி முறையே திருச்சி – திண்டுக்கல் சரக DIGகளாக பணியாற்ற உள்ளனர். இவர்கள் நாதக கட்சியினரால் சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்து பெண்களின் அந்தரங்கப் பதிவு வலைத்தளங்களில் பகிரப்பட்டதா? கைதான 2 பேரின் உறவினர்கள், நண்பர்களின் செல்போன்கள் ஆய்வு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் உடை மாற்றுவதற்கு தனியார் உடை மாற்று அறைகள் உள்ளன. கடந்த 23ம் தேதி புதுக்கோட்டை பக்தர் ஒருவரின் குடும்பத்தினர் உடை மாற்றியபோது, அறையில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அளித்த புகாரின்பேரில், கோயில் போலீசார் ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (34), மீரா மைதீன் (36) ஆகிய இருவரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இவர்களிடமிருந்து ரகசிய கேமராக்கள், செல்போன், மெமரி […]