திருட்டை தட்டி கேட்ட வியாபாரிக்கு பீர் பாட்டில் குத்து

வேளச்சேரியில் திருட்டை தடுத்ததால் வியாபாரியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, மேடவாக்கம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் முனிராஜ், 54. இவர், வேளச்சேரி, விஜயநகர், சரவண ஸ்டோர் முன்புறம் பெல்ட், மணி பர்ஸ் விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரின் கடையில் இருந்து பொருட்கள் திருடு போனது. அதிலிருந்து இரவு நேரத்தில் கடையில்லேயே தங்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கடையின் முகப்பில் படுத்திருந்தபோது, இரண்டு நபர்கள் […]