எச்சரிக்கை: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. இதை பயன்படுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள கடைகளில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என துப்புரவு ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது, 900 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
தாம்பரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு அபராதம்

தாம்பரம் மார்கெட் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம், 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் முக்கிய குடோன் சீல் வைப்பு மாநகராட்சி சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாம்பரம் மார்கெட் பகுதியில் புழக்கத்தில் உள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல்ரசக் சாலை, முத்துரங்கன் சாலை உள்ளிட்ட […]