+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பா?

பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!. அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற அழைப்புகள் வந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், பெறப்பட்ட சர்வதேச அழைப்புகளில், 1.35 கோடி அழைப்புகள் அதாவது 90 சதவீதம், இந்திய தொலைபேசி எண்களில் […]
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குநடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அலைபேசி மூலம் வாழ்த்து!

தமிழ்நாட்டில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிடமாடல் அரசில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் துணை முதலமைச்சர் பொறுப்பு நேற்று வழங்கப்பட்டது. புதிய துணை முதலமைச்சராகப் பதவி உயர்வு பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலரும் நேரில் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் […]
பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் போனில் பேச்சு

பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலக வட்டார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இருவரும் செப்.,9, 10 தேதிகளில் டில்லியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக விவாதித்தனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் வரமுடியவில்லை என்பதை தெரிவித்ததுடன், தனக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்ஜிலாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் கூறினார். சமீபத்திய பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அளவிலான பிரச்னைகளையும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.