பல்லாவரம் மாணவர் விடுதியில் ஊத்தப்பம் சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பல்லாவரத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி 10 துறைகளை ஆய்வுசெய்தார். பல்லாவரம் நாகல் கேணி அரசு ஆதிதிரவிடர் மணவர்கள் விடுதியில் இரவு உணவை சாப்பிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை முதல் பல்லாவரம் தொகுதியில் தங்கினார். அதனையடுத்து வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, சமுக நலன் மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் […]
மூளைச்சாவு அடைந்தவரின் இரண்டு கைகளை 2 பேருக்கு பொருத்தி சாதனை

சென்னை பெரும்பாக்கத்தில் அடுத்து அடுத்து இருவாரங்களில் இரண்டு இளைஞர்களுக்கு மாற்று கைகள் பொருத்தி கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவர்கள் சாதனை. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கை இளைஞருக்கும், மற்றொருவரின் கை ரியல் எஸ்டேட் ஆலோசகருக்கும் பொருத்தப்பட்டதால் அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாக நெகிழ்ச்சி. சென்னை பெரும்பாக்கம் கிளெனேகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் அடுத்து அடுத்து இரண்டு நபர்களுக்கு முளைச்சாவு அடைந்தவர்களின் கைகளை பொருத்தி சாதனை. இந்தியாவில் அதிக கைகளை பொருத்தியுள்ளதாக மருத்துவர்கள் பெருமிதம். குறிப்பாக பெண் ஒருவரின் கை ஒன்றை […]
2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற போர்வையில், தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோருவதா?: ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற பதிவாளர் கண்டனம்

டெல்லி: 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்ற பதிவாளர் விளக்கம் கேட்பதாக கூறி தவறான மனுவை தாக்கல் செய்திருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டில் 2ஜி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் தகவல் தொடர்பு சேவைக்கான அலைக்கற்றைகளை ஏலம் மூலம் மட்டுமே ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து தெளிவு தேவை என கூறி கடந்த ஆண்டு டிசம்பரில் ஒன்றிய அரசின் […]