பெருங்களத்தூரில் லாரி மோதி ஓட்டல் அதிபர் பலி

படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரியை சேர்ந்தவர் சங்கர்(58) ஓட்டல் நடத்திவந்தார். இன்று பிற்பகல் ஒருமணியளவில் தாம்பரத்தை நோக்கி இருசக்கர வாகனத்தை தலைக்கவசம் அணிந்தவாறு ஓட்டிவந்தார். முடிசூரை தாண்டி பெருங்களத்தூரில் வரும்போது கருங்கல் ஜல்லிகளை ஏற்றிவந்த டாரஸ் லாரி சங்கர் ஓட்டிசென்ற இருசக்கரவாகனத்தின் பின்னால் மோதியதில் கீழே விழுந்தவர் தலையில் டாரஸ் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்தார். இதனால் டாரஸ் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடினார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியினர் லாரியை சிறைப்பிடித்து […]
பெருங்களத்துர் ரெயில் நிலையத்தில் குடியிருப்போர் நல சங்க உறுப்பினர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர்

தூய்மை தினத்தை ஒட்டி தென்னக ரயில்வே அலுவலர்கள் ஊழியர்களும், பெருங்களத்தூர் பீர்க்கங்கரணை குடியிருப்பு நலச்சங்கம், PP residence welfare Association இணைந்து ரயில் நிலையத்தை சுத்தம் செய்கின்ற பணியில் ஈடுபட்டனர். ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நலச்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு மிக சிறப்பாக ரயில் தண்டவாளம் மற்றும் பயணிகள் அமருமிடம் Subway அனைத்து பகுதிகளும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் திரளான ரயில்வே அலுவலர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெருங்களத்தூர் கால்வாயில் செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, பெருங்களத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாப்பன் கால்வாயில் பொதுப்பணித் துறையின் மூலம் 2.45 கீ.மி நீளத்திற்கு தூர்வாரப்பட்ட பணிகளை செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா,உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆனந்குமார் சிங், பொதுப்பணித் துறை அலுவலர்கள், மாநகராட்சி செயற்பொறியாளர், உதவி […]
எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு

நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]
பெருங்களத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பெருங்களத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் தமிழக அரசு சார்பில் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பின்னர் 130 பள்ளி மாணவ மாணவிகள் விலையில்லா மிதிவண்டிங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தாம்பரம் மாநகராட்சி 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ் , பெருங்களத்தூர் எஸ்.சேகர், மாமன்ற உறுப்பினர் […]
பெருங்களத்தூரில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

தென் மாவட்டங்களுக்கு பஸ்ஸுக்கு செல்ல காத்திருப்பவர்களுக்கு பெருங்களத்தூர் என்றால் நன்றாக தெரியும்.மாலை 6 மணியில் இருந்து இரவு 12 மணி வரை சாலை ஓரத்தில் கூட்டம் கூட்டமாக நின்று பஸ்ஸுக்கு காத்திருந்து ஏறிச் செல்வார்கள்.அங்கு எந்த வசதியும் கிடையாது .போதுமான போலீஸ் பாதுகாப்பு கிடையாது.இத்தனைக்கும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அங்கு ஒரு அலுவலகம் வைத்துள்ளது.அங்கு அரசு பஸ்கள் வந்து நின்று மக்களை ஏற்றி செல்கின்றன.ஆனால் அந்த பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை. இதனால் […]
பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு கத்திக் குத்து

செங்கல்பட்டு மக்கான் சந்து விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 47) தனது பேரனின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக .(மொட்டை அடித்தல்) துணிமணிகள் மற்றும் பழவகைகளை வாங்கிக் கொண்டு செங்கல்பட்டுக்கு செல்ல பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் பயண சீட்டு வாங்கிக் கொண்டு வரும்போது ஒன்னாவது பிளாட்பாரத்தில் அடையாளம் தெரியாத நபர் தன் கையில் இருந்த கூர்மையான கத்தியால் தமிழ்ச்செல்வியின் வலது கையில் கிழித்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் கையில் பலத்த காயமடைந்த […]
தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டல குழு கூட்டம் ரூபாய் 3.64 கோடி மதிப்பீட்டில் 20 தீர்மானங்களுக்கு அனுமதி

பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மண்டல குழு தலைவர் டி.காமராஜ் தலைமை தாங்கினார். மாநகராட்சி உதவி ஆணையர் ஷகிலா முன்னிலை வகித்தார்.இதில் 4வது மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் 50வது வார்டு மாமன்ற உறுப்பினர் தாம்பரம் எம்.யாக்கூப் பேசுகையில், தாம்பரம் காந்தி சாலை – முத்துரங்க முதலி சாலை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்துகள் […]
பெருங்களத்தூர் பகுதியில் எல்இடி தெருவிளக்குகள்

நகராட்சி நிர்வாகத்துறை நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதி 55 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் தாம்பரம் மாநகராட்சி முழுவதும் பழைய மின் விளக்குகளை அகற்றிவிட்டு புதிய எல்.ஈ.டி பொருத்தும் திட்டத்தை குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசரன் துவக்கி வைத்தார். முதற்கட்டமாக தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் பொருத்தப்பட்ட எல்.ஈ.டி விளக்குகளை இயக்கி வைத்தார். தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் […]
பெருங்களத்தூரில் ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய வீடுகள்

பெருங்களத்தூரில் வாகன நிறுத்தும் வசதிகளுடன் நகர்ப்புற மேம்பாடு வாரிய குடியிப்புகளை முதலமைச்சர் காணொளி மூலம் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் நேரில் பங்கேற்பு. பெருங்களத்தூரில் 420 சதுர அடியில் வாகன நிறுத்துமிடத்துடன் 192 நகர்ப்புற மறுகுடியிப்பு விடுகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலமாக திறந்தார். குடியிப்புகளை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர்கள் சேகர், புகழேந்தி உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்து தர கூறினார். உதவி […]