குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ தா.மோ.அன்பரசன்‌

தாம்பரம்‌ மாநகராட்சி பெருங்களத்தூர்‌ மண்டலம்‌ வார்டு-32க்குட்பட்ட திருநீர்மலை பிரதான சாலையில்‌ மாநில நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்‌ கீழ்‌ ரூ.22.36 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதியதாக அமைக்கப்பட்ட LED மின்விளக்குகள்‌ பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு முன்னிலையில்‌ தொடங்கி வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா‌, பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌இ.கருணாநிதி‌, மாநகராட்சி மேயர்‌ வசந்தகுமாரி கமலகண்ணன்‌‌, துணை மேயர்‌கோ.காமராஜ்‌, மண்டல குழு தலைவர்‌ து.காமராஜ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ […]

பெருங்களத்தூர் குளம் ரூபாய் 1.40 கோடியில் சீரமைப்பு

தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூரில் மும்மத பிராத்தனையுடன் ஒருகோடி 40 லட்சம் செலவில் குளம் சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கிவைத்தார். தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மங்கலேரி குளத்தை ஒருகோடி 40 லடசம் மதிபீட்டில் ஆழப்படுத்தி கரைகளுடன் 400 மீட்டர் நடைப்பாதை, சுற்றுசுவர், 20 பேர் அமரும் விதமாக இருக்கைகள், மரங்கள் நடுவு உள்ளி சீரமைக்கும் பணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்தார். இதில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ், […]

தாம்பரம் அருகே இலவச மருத்துவமனை திறப்பு

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் 75வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெருங்களத்தூர்-பீர்கன்காரணை குடியிருப்போர் நலச்சங்கம், கேளம்பாக்கம் செட்டி நாடு மருத்துவமனை மற்றும் சாய் ஆக்ஸ்ரா டிரெஸ்ட் இணைந்து, அனைத்து வித மருத்துவர்களை கொண்டு மாபெரும் பொது இலவச மருத்துவமனையை ஓய்வு பெற்ற நீதிஅரசர். வள்ளிநாயகம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த இலவச மருத்துவமனையில் கண்,நெஞ்சகம்,பொது அறுவை சிகிச்சை,பொது மருத்துவம் மற்றும் குழந்தைகள் மருத்துவம் போன்றவற்றை இன்று முதல் , தினமும் காலை முதல் மாலை […]

பெருங்களத்தூர் நகைக்கடையில் செல்போனை திருடிய மர்ம ஆசாமி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரயில்வே கேட் அருகில் பிரகாஷ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நடத்தி வருவர் பிரகாஷ். இவர் வழக்கம் போல காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் கையில் விளம்பர பேப்பர்களை வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் கோயிலுக்கு […]

பெருங்களத்தூர்‌ மண்டலம்‌ குட்வில்‌ நகர்‌ பகுதியில்‌ “மிக்ஜாம்‌” புயலால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர்‌ மேலாண்மை ஆணையத்தின்‌ ஆலோசகர்‌ குணால்‌ சத்யார்த்தி தலைமையில்‌, ரங்கநாத்‌ ஆடம்‌‌, திமான்‌ சிங்‌‌, ஆகியோர்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்‌

உடன்‌ அரசு முதன்மை செயலாளர்‌ ககன்தீப்‌ சிங்‌ பேடி, நகராட்சி நிர்வாக இயக்குநர்‌ சு.சிவராசு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ஆ.ரராகுல்‌ நாத்‌, கேபிள்‌ டி.வி. நிர்வாக இயக்குநர்‌ தாம்பரம்‌ மாநகராட்சி கண்காணிப்பு அலுவலர்‌ ஆ.ஜான்ஜூயிஸ்‌, மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா‌, உதவி ஆட்சியர்‌ (பயிற்சி), ஆனந்த்குமார்‌ சிங்‌, தாம்பரம்‌ சட்டமன்ற உ றுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா உட்பட பலர்‌ உள்ளனர்‌.

நெடுங்குன்றம் பகுதியில் முதலை பிடிபட்டது

கன மழை புயலின் போது சில நாட்களுக்கு முன்பு 7 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று பெருங்களத்தூர் நெடுங்குன்றம் பகுதியில் சாலையை கடந்து சென்றது. இது தொடர்பான வீடியோக்கள் வெளியான நிலையில் தற்சமயம் முதலை சதானந்தபுரம் ஆலப்பபாக்கம் ஜி கே எம் கல்லூரி செல்லும் சாலையில் பொதுமக்கள் பார்த்தனர். உடனடியாக தாம்பரம் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தாம்பரம் பீர்க்கன்கரணை காவலர்கள் உதவியுடன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து […]

பெருங்களத்தூரில் 162 மாணவர்களுக்கு உதவிய ஆசிரியர்கள்

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகரில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கிறார்கள். புயல் மழையில் வீடுகள் முழுகியது. தங்கியவர்களை மட்டும் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர். இந்த நிலையில் மீண்டும் வீடு திரும்பிய அவர்களுக்கு நேற்று முந்தினம் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் கு.தியாகராஜன் தலைமையில் ஆசிரியர்கள் உணவு, குடிநீர் வழங்கினார்கள். அப்போது “4ம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரி தங்களின் நோட்டு புத்தகம் முழுவதும் நனைந்துவிட்டது. உடைகளும் இல்லை என வருத்தமுடன் தெரிவித்துள்ளார். […]

பெருங்களத்தூரில் கொத்தனார் பலி

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கொத்தனார் பிச்சமுத்து (50) தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று வழக்கம் போல் மூன்றாவது தளத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த போது கால் தவறி முப்பது அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். இதனை கண்ட சக தொழிலாளர்கள் உடனடியாக பலத்த காயமடைந்த பிச்சமுத்துவை அவசர ஊர்தி மூலம் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை […]

பெருங்களத்தூரில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

சென்னை அடுத்த முகலிவாக்கதை சேர்ந்தவர் கார்திக், உறவினர் வீட்டு திருமணத்திற்கு கூடுவாஞ்சேரி நோக்கி ஜி.எஸ்.டி சாலையில் சென்றபோது பெருங்களத்தூரில் திடீரென தீபற்றிய நிலையில் காரை விட்டு கார்திக் இறங்கிவிட்டார். ஆனால் கார் கொழுந்திவிட்டு எரிந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது, தாம்பரம் தீயணைப்பு வாகனத்தில் சென்ற வீரர்கள் தீயை கட்டுபடுத்தினார்கள்….

பெருங்களத்தூரில் விழா இல்லாமல் திறக்கப்பட்ட கழிப்பறை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பெருங்களத்தூர் அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் மழை பாதிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்த தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் ஜி.காமராஜ் ஆகியோர் அங்குள்ள பொதுமக்கள் கட்டி முடிகப்பட்ட கழிப்பிடம் திறக்கப்படவில்லை என கூறியுள்ளனர். இதனால் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆணையாளர் அழகு மீனாவிடம் பேசி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வலியுறுத்திய நிலையில் கழிப்பிடம் சாவியை ஓப்படைத்தார்…