தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் முகாமினை பெருங்களத்தூரில் துணை மேயர் காமராஜ் தொடங்கி வைத்தார்

இதில் மண்டல குழு தலைவர் டி காமராஜ் மாமன்ற உறுப்பினர்கள்,நகர் நல அலுவலர் அருள் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்
தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் மண்டலம் வார்டு&55,

சமத்துவ பெரியார் நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற சாலை உள்கட்டமைப்புத்திட்ட நிதியின் கீழ் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் சிமெண்ட் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி வசந்தகுமாரி கமலகண்ணன்அவர்கள் மற்றும் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் மண்டலக்குழு தலைவர் திரு.து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், தாம்பரம் & வண்டலுர் இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே திட்டப் பணிகளின் கீழ் ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் து.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற […]
புது பெருங்களத்தூரில் செல்போன் கடையை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 9 பேசிக் செல்போன், ஐந்தாயிரம் ரொக்க பணம் உட்பட பல்வேறு பொருட்கள் கொள்ளை சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே இருந்தவாறு 9 பேசிக் மாடல் செல்போன்கள், கல்லாவில் […]
பெருங்களத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் திமுக கவுன்சிலர் ஆபீசுக்கு விதிவிலக்கு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சுக்குநூறாக நொறுக்கினர். முறையாக முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். பெட்டிக்கடை கூட விட்டுவைக்காத மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள திமுக பிரமுகரின் கட்சி அலுவலகத்தின் மீது கை வைக்காதது ஏன் எனவும் மக்கள் கேள்வி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலை மற்றும் முக்கிய சாலைகளில் […]
பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு காமராஜர் பெயர் சூட்ட கோரிக்கை

பெருங்களத்தூரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் சங்கங்கள் கோரிக்கை பெருங்க்ளத்தூரில் காமராஜரின் 122 வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவி பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம் மற்றும் நாடார் பாதுகாப்பு பேரவை சார்பில் இன்று காமராஜரின் 122வது பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி, மாணவியர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை […]
பெருங்களத்தூரில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை மோதலில் பயங்கரம்

தாம்பரம் அருகே இஸ்லாமிய அடக்கஸ்தலத்தில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு இஸ்லாமிய அடக்கதலத்தில் இரட்டை கொலை, புதுப்பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையை சேர்ந்த அண்ணாமலை(25), புத்தர் நகர் 3 வது தெருவை சேர்ந்த ஜில்லா (எ) தமிழரசன் (26) ஆகிய இருவரை கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரேதம் காரணமாக பேசும்போது ஏற்பட்ட தகறாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா […]
செல்போன் விபரீதம் பெருங்களத்தூரில் ரெயில் மோதி பெண் இன்ஜினியர் பலி

பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார். இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் […]
திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் காலை மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், TTK நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு, ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்,

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், திரு.D.காமராஜ் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு.S.சேகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.S.சங்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.ச.இராஜேஸ்வரி வட்ட செயலாளர் திரு.கு.வெங்கடேசன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சி பெருங்களத்தூர் மண்டலம் வார்டு – 51 க்குட்பட்ட

கடப்பேரி ராஜகோபால் நகர் பகுதியில் திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.68.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் புதியதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் து.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள், […]