ஆட்சியில் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ.பெரியசாமி.
தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு கிடையாது; கூட்டணி ஆட்சி இல்லை என்பதில் முதல்வர் திட்டவட்டமாக உள்ளார். காங்கிரஸ் கேட்பது அவர்களது விருப்பம்; ஆனால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இருந்ததில்லை. – அமைச்சர் ஐ.பெரியசாமி
அமைச்சர் பெரியசாமிக்கு எதிரான சூமோட்டோ வழக்கில் இன்று தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்

இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில் இருந்து பெரியசாமி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தாமாக முன்வந்து விசாரணை சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து மறு ஆய்வு வழக்காக விசாரித்தது. தமிழக வீட்டு வசதி வாரிய வீட்டை ஒதுக்கியதில் முறைகேடு என பெரியசாமி மீது வழக்கு.