புதிய அமைப்பு உதயம்.

டாக்டர்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .குரோம்பேட்டை ஆனந்தா திருமண மண்டபத்தில் இன்று காலை 10:30 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ராகவேலு உள்பட 20 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொள்கிறார்கள் தாம்பரம் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதியில் உள்ள மருத்துவர் அனைவரும் பங்கேற்கிறார்கள் என்று சமூக ஆர்வலர் பி சந்தானம் தெரிவித்துள்ளார்.இது போன்ற அமைப்பு ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் அவர் கூறியுள்ளார்

அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி!

மதுரையில் இருந்து விமானம் மூலம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி. பயணிகள் விமான நிலையம் சென்று விசாரித்தபோது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலம். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை

97.76% ரூ2000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது!

ஏப்ரல் 30, 2024 வரை 97.76% 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. ரூ7,961 கோடி மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருக்கின்றன. மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, ரிசர்வ் வங்கியின் 19 கிளைகள், வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்! – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

சீனாவில் வீட்டை விட்டு வெளியேறிய 10 லட்சம் பேர்

கன மழை காரணமாக சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் 10 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது மாகாணம் முழுவதும் தேங்கியிருக்கும் நீர் வடிவதற்கு 1 மாதம் வரை ஆகலாம் என்று கூறப்பட்டுள்ளதால், அதுவரை தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அண்டை மாகாணங்களில் குடியேறியிருக்கின்றனர். கடந்த 140 ஆண்டுகளில் சீனாவில் இவ்வளவு மழை பதிவானதில்லை.