பதுங்கு குழிகளுக்குள் செல்ல இஸ்ரேல் வேண்டுகோள்

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது

பல்லாவரம் மாணவர் விடுதியில் ஊத்தப்பம் சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பல்லாவரத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி 10 துறைகளை ஆய்வுசெய்தார். பல்லாவரம் நாகல் கேணி அரசு ஆதிதிரவிடர் மணவர்கள் விடுதியில் இரவு உணவை சாப்பிட்டு தரம் குறித்து கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் அறிவித்த உங்களை தேடி உங்க ஊரில் திட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் இன்று காலை முதல் பல்லாவரம் தொகுதியில் தங்கினார். அதனையடுத்து வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, சமுக நலன் மகளிர் மேம்பாடு, ஆதிதிராவிடர் […]

மக்கள் குறைகளை தீர்க்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கோரிக்கை

அரசு அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு மக்களின் குறைகளை போக்க வேண்டும் கேளம்பாக்கத்தில் நடைபெற்ற ஊரக பகுதி மனுநிதி மூகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு:- செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் கேளம்பாக்கத்தில் ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போர் விசிக எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றியகுழு தலைபர் எல் இதயவர்மன், கேள்ம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் ராணி எல்லப்பன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த […]

திருவண்ணாமலையில் நெரிசல்: பக்தர்கள் கடும் அவதி!

அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அடுத்தபடியாக, அதிகளவு பக்தர்கள் சித்திரை மாத பௌர்ணமியன்று கிரிவலம் வருவது வழக்கம். அதன்படி, திங்கள்கிழமை இரவு முதலே பக்தர்கள் கிரிவலம் வரத் தொடங்கினர். செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் காலை 9 மணி வரை பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.இதன்பிறகு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் கிரிவல பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது. மாலை 3 மணிக்குப் பிறகு மீண்டும் கிரிவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. […]

இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ உத்தரவின்படி, 2024 நாடாளுமன்றப்‌ பொதுத்தேர்தல்‌ 19.04.2024 அன்று நடைபெறுவதையொட்டி

செங்கல்பட்டு மாவட்டம்‌ தாம்பரம்‌ மாநகராட்சியில்‌ பொதுமக்களிடையே 100% வாக்களிப்பதன்‌ முக்கியத்துவம்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும்‌ வகையில்‌ பல்லாவரம்‌ மண்டலம்‌ குளக்கரை தெரு பகுதியில்‌ தேர்தல்‌ குறித்து ரங்கோலி கோலம்‌ வரைந்து தேர்தல்‌ விழிப்புணர்வு உறுதி மொழியினை மாநகராட்சி அலுவலர்கள்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுவினர்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ ஏற்றுக்கொண்டனர்‌.

வருவாய் அலுவலர்கள் போராட்டத்தால் தாம்பரம் பொதுமக்கள் பாதிப்பு

தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் 10 நாட்களாக தொடர் பணி புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சான்றிதழ்கள் பெற வந்த பொதுமக்கள் பதிப்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி 10 நாட்களாக தாம்பரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பணி புறக்கணித்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு தரப்பில் அரசு சான்றிதழ் பெறவந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தனியார் நிறுவனத்தால் இடிந்த வீடுகள் பெருங்குடி மக்கள் பீதி

பெருங்குடியில் 5 வீடுகள் மண் சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து. மேலும் பல வீடுகளில் விரிசல் பகுதி மக்கள் அச்சம். தனியார் கட்டுமான நிறுவனத்தால் தோண்டப்பட்ட குழியால் விபரீதம். சென்னை பெருங்குடி பர்மா காலனி திருவள்ளுவர் நகர் 10வது தெருவில் அரியண்ட் பில்டர்ஸ் நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்கில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக சுமார் 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் அருகில் உள்ள இடங்களில் மண் சரிவு […]

பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது – உயர்நீதிமன்றம்.

பொங்கல் நேரத்தில் போராட்டம் நடத்தி பொதுமக்களுக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் – உயர்நீதிமன்றம். போராடுவதற்கு உரிமை இல்லை என நீதிமன்றம் சொல்லவில்லை. அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் இத்தனை பிடிவாதமாக இருப்பது ஏன்?. இந்த விவகாரத்தில் தீர்வு காண என்ன சிக்கல் உள்ளது? போராட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான் – உயர்நீதிமன்றம் பேச்சுவார்த்தை முற்று பெறாத நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜன 19-ம் தேதிக்கு தள்ளி வைப்பு – தமிழக அரசு பதில். ஓய்வூதியர்களுக்கு […]

நியாய விலை கடைகளில் ஆயிரம் ரூபாய் வழங்குவதில் கடை விற்பனையாளர்கள் கெடுபிடி.

கைரேகை பதிவானால் மட்டுமே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என கூறி வருவதால் பொதுமக்கள் அவதி. கடந்த ஆண்டுகளைப் போல அரிசி குடும்ப அட்டை இருந்தால் ரொக்க பணத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்