நாடாளுமன்றத்தில் குடியரசுத்தலைவர் உரை

ஸ்திரமான அரசின் மூலமே மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும். மக்களின் இந்த முடிவு இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கான நம்பிக்கை. உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது; விரைவில் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருவாகும். விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுகிறது. சிறிய நகரங்களுக்கு கூட விமான போக்குவரத்து வசதி கிடைத்துள்ளது-குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை. இந்த முறை தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் […]

ஜூன் 24இல் கூடுகிறது நாடாளுமன்றம்

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்களில் பதவியேற்பார்கள். உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். ஜூன் 26ஆம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். 27இல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார்.

போட்டித் தேர்வு முறைகேடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதா – நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்

போட்டித் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் மோசடிகளை தடுக்கும் வகையில், மாநிலங்களவையில் இன்று பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுக்கும்) மசோதா, 2024 நிறைவேற்றப்பட்டது. சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா நிறைவேறியது. முன்னதாக மக்களவையில் இந்த மசோதா கடந்த 6-ந்தேதி நிறைவேற்றப்பட்டது. முறைகேடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது.

மக்களவையில் இருவர் புகுந்ததால் அதிர்ச்சி: பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் குதித்தனர்

புதுடெல்லி: மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து புகை குப்பிகளுடன் அவைக்குள் குதித்த 2 இளைஞர்கள், எம்.பி.க்களின் மேஜை மீது ஏறி, தாவி குதித்துஓடியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.இதுதொடர்பாக 4 பேரை டெல்லி சிறப்பு போலீஸார் கைது செய்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்குள் கடந்த 2001 டிசம்பர் 13-ம் தேதி 5 தீவிரவாதிகள் உள்ளே புகுந்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மீது அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 9 பேர் உயிரிழந்தனர். பாதுகாப்பு படையினர் […]

நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நாளில் மக்களவையில் கலர் குண்டுவீசி தாக்குதல்: 2 வாலிபர்களை எம்.பி.க்கள் மடக்கி பிடித்தனர் சதிச் செயலில் ஈடுபட்ட பெண் உள்பட 5 பேர் கைது

பாஜ எம்.பி. வழங்கிய அனுமதி சீட்டில் உள்ளே வந்தவர்கள், மிகப்பெரும் பாதுகாப்பு குறைபாடு என கட்சி தலைவர்கள் கடும் கண்டனம். புதுடெல்லி: நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினத்தில், 2 நபர்கள் மக்களவைக்குள் நுழைந்து கலர் குண்டுகளை வீசிய விவகாரம் பெரும் பீதியை கிளப்பியது. இதுதொடர்பாக பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மைசூரு பாஜ எம்பி பிரதாப் சிம்ஹாவிடம் பெற்ற பாஸ் மூலம், அந்த 2 நபர்கள் மக்களவைக்குள் பார்வையாளர்களாக வந்து இந்த பயங்கரத்தை நிகழ்த்தி […]

நாடாளுமன்றத்தின் மக்களவைக்குள் பார்வையாளர் மாடத்தில் இருந்து அத்துமீறி நுழைந்த இருவர் கைதான நிலையில், அவர்கள் வீசிய மஞ்சள் நிற புகை கொண்ட புகை பட்டாசுகளை வீசிய நிலையில், அது தொடர்பாக தீவிரவாத தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது