செம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட 41 வது வார்டு பகுதியில் சரவணா நகர் பூங்காவில் 2245 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியின் தொடக்க விழா நடந்தது

தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா மரக்கன்று எடுத்துக் கொடுத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் திருமதி ராஜலட்சுமி, மேயர் திருமதி வசந்தகுமாரி கமலக்கண்ணன்* செம்பாக்கம் மண்டல குழு தலைவர் ஜெயபிரதீப்சந்திரன்* மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் மாநகராட்சி பொறியாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ராஜகீழ்பாக்கத்தில் துப்புரவு பணி

ராஜகீழ்பாக்கத்தில் உள்ள சரவணா நகர் பூங்காவில் S.S.R.P குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்- தாம்பரம் தொகுதி இளைஞர் பெருமன்றம் சார்பில் துப்புரவு இயக்கம் நடத்தப்படுகிறது. பூங்கா நீண்ட காலமாக பராமரிக்கப்படாத நிலையில் உள்ளது. உள்ளூர்வாசிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தீவிரமாகப் பங்கேற்று பூங்காவை அதன் பழைய நிலைக்கு கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மே 17ம் தேதி கோடை விழா மற்றும் பிரையண்ட் பூங்காவில் 61வது மலர் கண்காட்சி துவங்கியது

கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 10 உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் பல ஆயிரம் மலர் செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு கோடி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. பூங்காவில் பூத்து குலுங்கும் வண்ண மலர்களை 360 டிகிரியில் சுழன்று வீடியோ எடுக்க புதிய கருவி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 4 தினங்களில் 20 ஆயிரம் சுற்றுலாப்பயணிகள் பிரயண்ட் பூங்காவிற்கு வந்து சென்றுள்ளனர்.இதன்மூலம் நுழைவு கட்டணமாக ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சாரல் மழை பெய்து […]

உதகை மலர் கண்காட்சி – ரூ.150 கட்டணம் நிர்ணயம்

நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் மே 10 முதல் 20ஆம் தேதி வரை மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மலர் கண்காட்சியில் சிறியவர்களுக்கு (6-12 வயது) ரூ.75, பெரியவர்களுக்கு ரூ.150 கட்டணம் நிர்ணயம். இந்தாண்டு மலர் கண்காட்சியில் 6.5 லட்சம் மலர்கள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன – நீலகிரி ஆட்சியர்.

சிட்லபாக்கம் 43வது வார்டில் உள்ள சரஸ்வதி நகர் பாபு தெரு பூங்காவில் புதியதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகின்றன

அவற்றின் தரத்தை மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் ஆய்வு செய்தார். தொடர்ந்து சிறுவர் உபகரணங்களை பதிக்கும் பணி தொடங்கிய போது எடுத்த படம்

பம்மல் மண்டலம் 7,11 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் ரூபாய் 36.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நான்கு பூங்காக்களை தாம்பரம் மாநகராட்சி- மண்டலம் 1 குழுத் தலைவர்- வே.கருணாநிதி திறந்து வைத்தார்

உடன் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தாம்பரம் மாநராட்சி 34வது வார்டு சிட்லபாக்கம் பகுதி குமார் அவென்யூ அறிஞர் அண்ணா பூங்கா புதர்மண்டி பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது

சென்னை சென்ட்ரல் சிட்லபாக்கம் அரிமா சங்கம் சார்பில் பூங்காவை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரி டீன் வி.ரேவதி, லயன்.விக்டோ பிளாக்கா, முன்னாள் கவுன்சிலர் பிரதாப் , 43-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் கலந்து கொண்டார்கள்.