பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்தில் 30 வருடங்களாக ஆவண எழுத்தர் பணி செய்யும் சுந்தரேசன் ஓய்வூ பெற்றதை முன்னிட்டு அவருக்கு பம்மல் ஆவண எழுத்தர்கள் சங்கத்தலைவர் பிரபாகரன் தலைமையிலும், மாநிலத் துணை செயலாளர் லயன்.கே.எம்.ஜே.அசோக் முன்னிலையிலும் பாராட்டுவிழா நடைபெற்றது

இந்நிகழ்ச்சியில் சுந்தரரேசன் தம்பதியினருக்கு ரூ.1,30,000/-& ம், பணமுடிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினர்.
பம்மல் எண்ணை கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி மெயின் ரோடு சங்கர் நகர் பகுதியில் சிவகேசன் என்பவர் 3வருடங்களாக ஆயில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டி மற்றும் சாமி உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து […]
அதிகாரிகள் அலட்சியம் மழை நீர் கால்வாயில் விழுந்த பெண் படுகாயம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாவரத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழந்த வயதான பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் மெயின் ரோடு பஜனை கோயில் தெரு கண்டோன்மென்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மழை நீர் தேங்கும் பிரச்சனை இருந்து வந்ததால், அதனை தவிர்க்க மழை நீர் […]
பம்மல் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை மேயர் ஆய்வு

மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, தலைமையில் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பம்மல் மண்டலம் வார்டு-7, அண்ணா நகர் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை பணிகளை மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழுத்தலைவர் வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள், தலைமை பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், உதவி/இளநிலை பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
தாம்பரம் வீட்டில் பிரபல ரவுடி தலை சிதைக்கபட்ட நிலையில் வெட்டி கொலை

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி மோகன் ராஜ் இவர் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது, இந்நிலையில் மோகன்ராஜ் மணிமங்கலம் அடுத்த ஆதனூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்து வந்துள்ளார், இன்று காலை மோகன்ராஜை சில மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்துவிட்டதாக அவரது தங்கையின் செல்போனுக்கு தொடப்பு கொண்ட நபர் ஒருவர் கூறியதை அடுத்து பதறி போனவர் சம்பவ இடத்திற்க்கு சென்று பார்தத போது தலை […]
பம்மல் ஊதுபத்தி ஆலை தீப்பிடித்து எரிந்தது

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் மனோலையா என்ற ஊதுபத்தி தயாரிக்கும் கம்பனி இயங்கி வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது திடிரென தீ பற்றி எரிய தொடங்கி கரும்புகை வெளியேறுவதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு கம்பெனியில் இருந்து வெளியேரினர். மேலும் தீ விபத்து குறித்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர் சம்பவம் இடத்திற்க்கு வந்த தீயனைப்பு துறையினர் போராடி […]