பாதாள சாக்கடையில் சிக்கிய எரிவாயு லாரி பம்மலில் போக்குவரத்து பாதிப்பு

பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை பம்மலில் எரிவாயு ஏற்றிசென்ற லாரி பாதளசாக்கடை தோண்டப்பட்டு சரியாக மூடாதசாலையில் சிக்கி சாய்ததால் போக்குவரத்து பாதிப்பு, கிரேன், ஜேசிபி இயந்திரம் கொண்டு மீட்டு வருகிறார்கள். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட பல்லாவரம்- அனகாபுத்தூர் பிரதான சாலை உள்ளது நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த சாலை ஏற்கனவே குறுகலாகவும் வளைவு, நெளிவுகள் அதிகமான சாலை, இதற்காக விரிவாக திட்டமிட்ட அதன்பணிகளும் நடைபெறாமல் உள்ளது.இந்த நிலையில் […]

கோவில் விழாவில் பட்டாக்கத்தியுடன் இளைஞரை வெட்ட முயலும் வீடியோ வைரல்

சென்னை பம்மலில் இளைஞர் ஒருவர் பட்டா கத்தியை வைத்து ஒருவரை வெட்ட முயலும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தியை கொண்டு வெட்ட முயலும் இளைஞரை சக நண்பர்கள் மடக்கி பிடிக்கும் வீடியோ பதிவாகி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் அடுத்த சங்கர் நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பம்மல் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு எதிரே அந்தோணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தப் ஆலயத்தில் 57 வது ஆம் ஆண்டு கொடி திருவிழா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் […]

பம்மல் தெற்கு பகுதி திமுக சார்பில் பிரமாண்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்

காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் தாம்பரம் மாநகரம் பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் பகுதி கழக செயலாளர் தாம்பரம் மாநகராட்சி 1வது மண்டல குழுத் தலைவர் வே.கருணாநிதி அவர்கள் ஏற்பட்டில் பம்மல் மண்டல அலுவலகம் அருகில் அமைக்கப்பட்ட நீர்-மோர் பந்தலை காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட கழக செயலாளர், குறு-சிறு மற்­றும் நடுத்­தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் திறந்து வைத்து மோர், தர்பூசணிபழம், இளநீர், கிர்ணிபழம், ரோஸ் மில்க், பாதாம் மில்க், பிஸ்தா மில்க், சாக்லேட் […]

உடல் எடை குறைப்பு சிகிச்சையில் என்ஜீனியர் பலி பம்மல் டாக்டர் மீது புகார்

பம்மல் தனியார் மருத்துவ மனையில் ஐ.டி பொறியாளருக்கு எடை குறைப்பு, குடல் சுருக்க அறுவை சிகிச்சை. மருத்துவர் முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால் மகன் உயிரிழந்ததாக தந்தை காவல் நிலையத்தில் புகார். பாண்டிச்சேரி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் செல்வநாதன்(52) அரசு ஒழுங்குமுறை விற்பனை மையத்தில் கிளினராக பணி செய்துவருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள், முதல் மகன் பி.டெக் ஐடி படித்த ஏமசந்திரன்(26) உடல் பருமன் பாதிப்பு காரணமாக 156 கிலே எடையுடன் இருந்துள்ளார். இவரின் இரண்டாவது மகன் […]

பம்மல் தெற்கு பகுதி தி.மு.க. 11வது வட்ட செயலாளர் வி.சுகுமாரன், 5வது வட்ட செயலாளர் வெங்கடேசன் 6வது வட்ட செயலாளர் ஜெகநாதன் ஏற்பாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பிக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டனர்

பம்மல் 1வது மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, இந்தியா கூட்டணி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் பகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏரானமானவர்கள் கலந்து கொண்டனர்.

பம்மல் அருகே வீட்டு முன்பு இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு

பம்மல் அருகே அதிகாலையில் திடீரென மூன்று இருசக்க வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த பொருட்கள் தீபற்றி எரிந்ததால் பரபரப்பு. முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் (49) நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கிகொண்டிருந்த போது இன்று அதிகாலை திடீரென வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் தீபற்றி மளமளவென எரிவதை கண்ட சம்பந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறினர்கள். வெளியேரிய சிறிது […]

பம்மல் மண்டலம் 7,11 மற்றும் 12 ஆகிய வார்டுகளில் ரூபாய் 36.75 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட நான்கு பூங்காக்களை தாம்பரம் மாநகராட்சி- மண்டலம் 1 குழுத் தலைவர்- வே.கருணாநிதி திறந்து வைத்தார்

உடன் மாமன்ற உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள், மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சாம்பாருக்காக கொலை பரபரப்பு வீடியோ வைரல்

பம்மல் பிரதான சாலையில் தனியார் சைவ ஓட்டலில் கூடுதல் சாம்பார் கேட்ட தந்தை மகன் ஓட்டல் ஊழியரை தாக்கும் காட்சி வெளியாகியுள்ளது. ஓட்டலில் இட்லி வாங்க வந்த தந்தை சங்கர், மகன் அருண்குமார் கூடுதல் சாம்பார் கேட்டனர். அதில் பிரச்சினை ஏற்பட்டது. சாம்பார் வழங்கப்பட்ட நிலையில் வாசலில் காவலாளியை முதலில் அருண்குமார் கண்ணத்தில் அடிக்க அதனை மற்றொரு ஊழியர் தட்டிகேட்க இருவரிடமும் தந்தை மகன் தகறாறு செய்த நிலையில் அதனை தடுக்க வந்த ஓட்டல் மேற்பார்வையாளர் அருணை […]

கூடுதல் சாம்பார் தராததால் ஹோட்டல் ஊழியரை அடித்து கொலை தந்தை மகன் கைது

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பிரதான சாலையில் (அடையார் ஆனந்த பவன்) பிரபல தனியார் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூரை சேர்ந்த அருண்(30) என்பவர் சூப்பர்வைசராக பணியில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் ஹோட்டல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது அனகாபுத்தூர், லெட்சுமி தெரு, பாரி நகர், கிராண்ட் பிளாட்டில் வசித்து வரும் சங்கர் (55) மற்றும் அவரது மகன் அருண்குமார்(30) ஆகிய இருவரும் சாப்பிட இட்லி  பார்சல் வாங்க […]

தாம்பரம்‌ மாநகராட்சி பம்மல்‌ மண்டலம்‌, வார்டு-03க்குட்பட்ட கன்னியம்மன்‌ கோவில்‌ தெரு பகுதியில்‌ மேற்கொள்ளப்பட்டு வரும்‌ பாதாள சாக்கடை திட்டப்‌ பணிகளை மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌. அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வின்‌ போது மாநகராட்சி செயற்பொறியாளர்‌ த.ஞானவேல்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.