பாம்பன் புதிய ரயில் பாலம்: பணிகள் அனைத்தும் ஓவர்… விரைவில் திறப்பு விழா!
ராமேசுவரம் பாம்பனில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இதனை திறப்பதற்கான ஏற்பாடுகள் ரயில்வே அமைச்சகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. பாம்பன் ரயில் பாலம் 1914ம் ஆண்டு கட்டப்பட்டது. தொழில்நுட்ப பிரச்சினை, தூக்குப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டதால் பழைய ரயில் பாலம் அருகே புதிய ரயில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு, 2019 மார்ச் மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.