விமான நிலையம் அருகே 600கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டிடங்கள் இடிப்பு

செங்கல்பட்டு மாவட்ட பல்லாவரம் காண்டோன் மெண்ட் பகுதியில் சென்னை விமான நிலையம் அருகே 600 கோடி அரசுக்கு சொந்தமான இடம் ஒன்றரை ஏக்கர் நிலம் கடந்த ஒருமாதம் முன்னர் வருவாய்துறையினரால் அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி சீல்வைக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு உத்திரவை அடுத்து அந்த இடத்தை சென்னை மெட்ரோரெயில் திட்டபணிக்காக ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சீல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டிடங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்திரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்துறையினர் ஒரு பொக்லைன், […]

பல்லாவரம் ரேடியல் சாலையில் கார் மோதி காவலாளி பலி

சென்னை ஜமீன் பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (72) அப்பகுதியில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பல்லாவரம் ,துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக தனது சைக்காலில் ஐயப்பன் சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த வாடகை கார் மோதியதில் தூக்கி வீசாபட்ட முதியவரின் இரு கால்களிலும் முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் பலத்தகாயமடைந்த முதியவரை மட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு […]

பம்மல் எண்ணை கடையில் ஐம்பதாயிரம் கொள்ளை சிசிடிவியில் பரபரப்பு காட்சிகள்

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் காந்தி மெயின் ரோடு சங்கர் நகர் பகுதியில் சிவகேசன் என்பவர் 3வருடங்களாக ஆயில் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை இரண்டு முப்பது மணி அளவில் 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று கல்லாப்பெட்டி மற்றும் சாமி உண்டியலில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சிசிடிவி காட்சியை ஆதாரமாக வைத்து […]

தளபதி விஜய் நூலகம் தாம்பரத்தில் திறப்பு

தாம்பரம், பல்லாவரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் துவங்கி வைத்தார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ‘விஜய் விலையில்லா மருந்தகம்’, ‘விஜய் விழியகம்’, ‘விஜய் பயிலரங்கம்’ உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டத்தினை இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் […]

படிப்புக்காக உணவு விநியோகம்: பல்லாவரம் மாணவர் விபத்தில் உயிரிழப்பு

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துரை சேர்ந்த கல்லூரி மாணவர் மகேஸ்வரன்(19), சேலையூர் பாரத் கல்லூரியில் மெக்கனிக்கல் இஞ்னியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். குடும்ப சூழல் காரணமாக பகுதி நேரமாக ஆன்லைன் ஆப் மூலம் உணவு விநியோகம் செய்தார். நேற்று இரவு 10.30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் குரோம்பேட்டை சென்றபோது பின்னால் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கிவிசப்பட்ட மகேஸ்வரன் தலையில் பலத்தகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு […]

பல்லாவரத்தில் நடுரோட்டில் லாரி டிரைவர்கள் டாக்டர் தம்பதியினரை தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

சென்னை பல்லாவரத்தை சேர்ந்த டாக்டர் மேகசியான் (வயது-33) இவர் சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி தாரணி இவரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். பல்லாவரம் ரேடியல் சாலையில் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் நோக்கி இருவரும் சென்ற கார் மீது லாரி மோதியது இதில் கார் சேதமான நிலையில் காரின் உரிமையாளர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு […]

அதிகாரிகள் அலட்சியம் மழை நீர் கால்வாயில் விழுந்த பெண் படுகாயம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் பல்லாவரத்தில் மழைநீர் வடிகால்வாயில் விழந்த வயதான பெண்ணுக்கு மார்பு, கையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் விபத்து ஏற்பட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னை பல்லாவரத்தில் இருந்து பம்மல் செல்லும் மெயின் ரோடு பஜனை கோயில் தெரு கண்டோன்மென்ட் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு மழை நீர் தேங்கும் பிரச்சனை இருந்து வந்ததால், அதனை தவிர்க்க மழை நீர் […]

பல்லாவரம் பள்ளியில் சாலை பாதுகாப்பு ஓவியப்போட்டி

சாலை பாதுகாப்பு குறித்து மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காவல் துறையினர் சார்பில் மாநில அளவிலான ஓவியம் மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு போக்குவரத்து காவல் காப்பாளர் சார்பில் பல்லாவரம் தெரேசா பள்ளியில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 25 பள்ளிகளை சேர்ந்த 134 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையாளர் குமார் மாணவர்களின் ஓவிய போட்டியை துவக்கிவைத்தார். தமிழ்நாடு போக்குவரத்து காவல் முதன்மை காப்பாளர் கருப்பையா, […]

சுவர் இடிந்து விழுந்து பல்லாவரத்தில் பெண் பலி.

ஜமீன் பல்லாவரம் பாரதி நகரை சேர்ந்தவர் சத்தியவாணி (55) வீட்டு வேலை செய்து வந்தார் இவருடைய கணவர் கண்ணியப்பன் கூலி வேலை செய்து வருகிறார், நேற்று இரவு சென்னை புறநகர் பகுதியில் பலத்த மழை பெய்ததால் குளிச்சியான சூழல் நிலவியது இதனால் சத்தியவாணி கீழ் வீட்டில் புழுக்கமாக இருப்பதாக கூறிவிட்டு மொட்ட மாடியில் தூங்குவதற்கு சென்றுள்ளார், இன்று அதிகாலை அருகே சரவணன் என்பவரின் வீட்டின் சுற்று சுவர் சத்தியவாணி தூங்கி கொண்டிருந்த வீட்டின் சுற்று சுவர் மீது […]