பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கு: தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரண்

பல்லடம் அருகே 4 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரான வெங்கடேஷ், சேனை முத்தையா ஆகியோர் காவல்நிலையத்தில் சரணடைந்தனர். ஏற்கனவே செல்லமுத்து என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் தேடப்பட்டு வந்த இருவர் சரணடைந்தனர்.
பல்லடம் சம்பவம் – சிசிடிவி வெளியீடு

பல்லடம் நால்வர் படுகொலை சம்பவம் தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. குடும்பத்தினரை கொலை செய்ய துரத்திச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு. குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து தகராறு.
பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதானவருக்கு கால் முறிவு

பல்லடத்தில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறிவிட்டு செல்லமுத்து தப்பிக்க முயன்றார். அப்போது கீழே விழுந்ததில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பல்லடம் படுகொலை – முதல் தகவல் அறிக்கையில் பரபரப்பு தகவல்கள்

கொலைக்கு முன்விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல் கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார். உணவகம் எதிரே இந்த வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்திருக்கிறார். உணவகத்தில் இருந்து சிலிண்டர், கோழிக் கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம்.
பல்லடம் கொலை வழக்கில் கைதான செல்லமுத்து சிகிச்சைக்கு அனுமதி

கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக விசாரணைக்கு அழைத்து செல்லும்போது செல்லமுத்து தப்ப முயற்சி மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்து காயம்
பல்லடத்தில் 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் – 2வது நாளாக உடலை வாங்க மறுத்து போராட்டம்

குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடல்களை வாங்க போவதில்லை – உறவினர்கள் பல்லடத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு