பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரோப்கார் சேவை இன்று முதல் 40 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக நிர்வாகம் அறிவிப்பு
SRM கல்லூரியில் நடைபெற்ற நேஷனல் லெவல் Artification ரோபோட்டிக் சேலஞ்ச் போட்டியில் முதல் பரிசு வென்ற

Zion பள்ளி 9ஆம் வகுப்பு மாணவனும், பாரதி பிரஸ் பி.பழனி பேரனும், கார்த்திகேயன் மகனுமான கே.லக்ஷய் பரிசு வென்ற மாணவனை நகர காங்கிரஸ், மூத்த குடிமக்கள் மற்றும் நெல்லையப்பர் ம.போ.சி.தமிழ் பேரவை நிர்வாகிகள் வாழ்த்தினர்.
பழனியில் 80 டன் எடை கொண்ட கல்லை குடைந்து செய்யப்பட்ட பிரமாண்ட கருப்பசாமி சிலை!

பழனி மலை அடிவாரத்திற்கு திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து 80 டன் எடை கொண்ட பெரிய கல் கொண்டு வரப்பட்டு சிலை செய்யும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்றது. பல்வேறு சிற்பக் கலைஞர்கள் இணைந்து 17 அடி உயரத்தில் கருப்பசாமி சிலையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். தற்போது விருதுநகரில் உள்ள கோயிலில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால் இந்த பிரமாண்ட சிலை கயிறு கட்டி கிரேன் மூலம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டது.
வரும் 30ஆம் தேதி ஒரு நாள் மட்டும் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக பழனி மலை கோயில் ரோப் கார் சேவை இயங்காது
ஆகஸ்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு

பழனியில் ஆகஸ்ட் 24, 25ல் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு. முருகன் திருக்கோயில்களின் கண்காட்சி அரங்குகள், அறுபடை வீடுகளின் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. ஆன்மிக சொற்பொழிவுகள் பக்தி இசை, பட்டிமன்ற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
பழனியில் கடும் வெயிலால் பக்தர்கள் அவதி

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி மலைக்கு செல்லும் முன், பக்தர்கள் பாத விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு தான் படிப்பாதைகளிலோ, யானை பாதைகளிலோ, மின்னிலுவை ரயிலிலோ, ரோப் காரிலோ, செல்வார்கள். இதில், நடந்து செல்லும் பக்தர்களுக்கு வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் கால்களில் சூடு தாங்காமல், கொப்பளங்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் அவதி அடைகின்றனர். பக்தர்களின் நலன் கருதி நிழல் பந்தலோ அல்லது தரை விரிப்போ அல்லது கூலிங் […]
பழனி முருகன் கோயிலில் பராமரிப்பு பணிகளுக்காக 2 மாதங்கள் நிறுத்தப்பட்ட ரோப் கார் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது

ரோப் காரில் பெட்டிகள், இரும்பு சக்கரங்கள், கம்பி வடம் உள்ளிட்டவை மாற்றப்பட்டு கடந்த இரு தினங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பழனி முருகன் கோயிலில் செல்போனுக்கு தடை!

பழனி முருகன் கோயிலில் இன்று முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்களது செல்போன் மற்றும் கேமராக்களை பாதுகாப்பாக மலையடிவாரத்தில் ஒப்படைத்துச் செல்ல வசதியாக, கோயில் நிர்வாகம் சார்பில் கைப்பேசி வைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 5 கட்டணம் செலுத்தி, ரசீதை பெற்றுக் கொண்டு பக்தர்கள் செல்போனை இங்கு வைத்துச் செல்லாலாம். பின் மீண்டும் தரிசனம் முடித்த பின், ரசீதை கொடுத்து செல்போனை பெற்றுச் செல்லலாம்.
பழனி முருகன் கோவிலுக்குள் செல்போன், கேமராபொருத்திய கருவிகளுக்கு விதிக்கபட்ட தடை அக்.1 முதல் அமல்

தடையை மீறுபவர்கள் மீது குற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில்அறநிலையத்துறை திட்டவட்டம்.
பழனி கோயில் பெயரை பயன்படுத்தி மோசடி

பழனி முருகன் கோயிலில் தொலைபேசி வாயிலாக அர்ச்சனை என வாட்ஸப்பில் வெளிவரும் போலிதகவல் ஆடி கிருத்திகையன்று ஒருகோடி பேருக்கு அர்ச்சனை எனக்கூறி பணம்பறிக்கும் மோசடி கும்பல்… பொய்யான தகவலை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களுக்கு கோயில் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.