பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், அமமுக இணைந்தது
“எங்கள் கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளதனால், இதுவொரு மெகா கூட்டணியாக விளங்குகிறது…”

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பாஜக நிர்வாகிகளுடன் நேற்று நள்ளிரவு பேச்சுவார்த்தை நடத்திய பின், ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு நிலையான சின்னம் இல்லாததால் தாமரைச் சின்னத்தில் போட்டியிட பாஜக நிர்பந்திப்பதாகவும், அதற்கு அவர் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் இடம்பெறுவாரா? அவரை பாஜக கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறதே? ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்க அண்ணாமலை மறுப்பு.
பாஜகவுடன் தான் கூட்டணி – ஓபிஎஸ்

“பாஜகவுடன் தான் கூட்டணி என நிலைப்பாடு எடுத்துள்ளோம்” “மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம்”
“அதிமுகவை மீட்பதே இலக்கு” – ஓபிஎஸ்

தனிக்கட்சி ஆரம்பிக்க மாட்டோம் “ஈபிஎஸ்-யிடம் இருந்து அதிமுகவை மீட்பதே நம் இலக்கு” தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஎஸ் பேச்சு
அதிமுக பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய ஓபிஎஸ் மனு தள்ளுபடி

அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு. தனி நீதிபதி முன்பு இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தல்.
முன்னாள் அமைச்சர்கள் ஓபிஎஸ், வளர்மதி ஆகியோர் வழக்குகளிலும் பிப்ரவரி 5 முதல் 9 வரை தினசரி விசாரணை .. சென்னை உயர்நீதிமன்றம்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தொடர்ந்த வழக்கு டிச. 11-ம் தேதிக்கு ஒத்திவைப்பு- சென்னை உயர்நீதிமன்றம்

மறு உத்தரவு வரும்வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த மாட்டேன் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உத்தரவாதம். உத்தரவாதத்தை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டுவரும்படி எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்.
கோர்ட் உத்தரவுபடி கட்சி வேட்டி இல்லாத OPS (சிங்கப்பூர் ஏர்போர்ட்)
பாஜக அழைப்பின் பேரில் டெல்லி செல்லும் ஓபிஎஸ் மற்றும் டி.டி.வி.தினகரன்!

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்திக்க நாளை மறுநாள் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் இணைந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல். டெல்லி செல்லும் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி.தினகரனும் இணைந்து ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.