ஓபிஎஸ்க்குஅனுமதி மறுப்பு

தூத்துக்குடி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரட்டை இலை வழக்கு – ஓபிஎஸ் கருத்தை கேட்க வேண்டும்

அதிமுகவுக்கு இரட்டை இலையை ஒதுக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மனு மீது ஓபிஎஸ் கருத்தை கேட்க வேண்டும் – தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று அளித்த விண்ணப்பம் மீது 4 வாரங்களில் முடிவெடுக்கவும் உத்தரவு. அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து சூர்யமூர்த்தி என்பவர் மனு தொடர்பாக அதிமுக பதில் அளித்துள்ளது – தேர்தல் ஆணையம். தங்களது தரப்பையும் கேட்ட பின்னரே முடிவெடுக்க உத்தரவிட வேண்டுமென […]

ஓ.பி.எஸ். அணியில் இருந்து முன்னாள் எம்.எல்.ஏ.ஜே.சி.டி.பிரபாகரன் விலகுவதாக அறிவிப்பு

பெங்களூரு புகழேந்தி, முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆகியோர் ஓ.பி.எஸ் ஆதரவு நிலையில் இருந்து விலகுவதாகவும் அறிவிப்பு.

அதிமுக தலைவர்களை விமர்சித்த அண்ணாமலையோடு கூட்டணி வைத்தவர் ஓபிஎஸ்

அதிமுக தொண்டர்களை ஒன்றிணையுமாறு அழைக்க ஓபிஎஸ்க்கு தகுதியில்லை – கே.பி.முனுசாமி. இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்க்கு, தொண்டர்களை அழைக்க என்ன உரிமை உள்ளது என்றும் கே.பி.முனுசாமி கேள்வி.

ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” – உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, […]

ஓ.பன்னீர்செல்வம் அணி லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை என தகவல்

39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிந்துவிட்டதாக அண்ணாமலை அறிவிப்பு தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது பாஜக கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது பாஜக ஓபிஎஸ் அணிக்கு பாஜக சீட் ஒதுக்காத நிலையில் ஓபிஎஸ் விரைவில் அறிவிக்க உள்ளார்.

தெலங்கானா ஆளுநராக ஓபிஎஸ் அல்லது அஇசமக வைக் கலைத்து விட்டு பாஜகவில் இணைந்த நடிகர் சரத்குமாரும்,

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக, ஓபிஎஸ் ஆதரவாளரும், அவரது தொழில் பங்குதாரருமான Ex.MLA மனோகரனின் உடன்பிறந்த அண்ணன் தென்காசி ஆனந்தன் அய்யாசாமி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.ZOHO நிறுவன அதிபர் ஸ்ரீதர் வேம்புவின் நண்பரான ஆனந்தன் அய்யாசாமி துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கும் நெருக்கம் என்பதால் அவருக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணியினர்

ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இணைந்த ஓபிஎஸ் அணியின் முக்கிய நிர்வாகிகள் ஓபிஎஸ் அணியின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளர் ஜி.சரவணன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் அதிமுகவில் இணைந்தனர் திமுக, மதிமுக நிர்வாகிகள் உள்பட 300 பேர் ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில் மேலும் மேலும் அதிமுகவை வலுப்படுத்தி வரும் ஈபிஎஸ்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது

சின்னம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.