கூட்டணி வதந்தியை மறுத்த ஓபிஎஸ், டிடிவி
மத்திய மந்திரி பியூஸ் கோயில் நேற்று எடப்பாடி சந்தித்து தேர்தல் கூட்டணி குறித்து பேசினார் அப்போது ஓபிஎஸ் டிடிவி தினகரன் கட்சிகளுக்கு அணிகளுக்கு எத்தனை இடங்கள் என்ற செய்திகள் வெளியாகின தற்போது அவர்கள் இரண்டு பேருமே இதனை மறுத்துள்ளனர் எடப்பாடி உடன் அணி சேர மாட்டேன் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார் டிடிவி தினகரன் கல்யாணமே ஆகவில்லை அதற்குள் பிள்ளைக்கு பெயர் வைக்கலாமா என்று கேட்டுள்ளார்
NDAகூட்டணிக்குள் ஓபிஎஸ், டிடிவி?
NDA கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகளை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்ததாக தகவல்; 170 – அதிமுகவும்,பாஜக-23,பாமக-23,தேமுதிக-6,அமமுக -6தமாக -3ஓபிஎஸ் -3 என புதிய பட்டியலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயலிடம் இபிஎஸ் வழங்கியதாக தகவல்
தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார்: இபிஎஸ்.
தீயசக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்; தீய சக்தியை ஒழிக்கவே இயேசு வந்தார். சிறுபான்மை மக்களின் காவலன் அதிமுக கிறிஸ்தவர்களை எம்ஜிஆர் மிகவும் நேசித்தார்; ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்கு உழைக்கும் இயக்கம் அதிமுக” – சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கிய ஓபிஎஸ்: டிச.23-ம் தேதி முறைப்படி அறிவிக்க திட்டம்
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் புதுக்கட்சி தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், அது குறித்து வரும் டிச.23-ம் தேதி மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசித்து முறைப்படி அறிவிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் நேற்று வெளியிட்ட அறிக்கையின் லெட்டர் பேடில் ‘உரிமை மீட்பு குழு’ என்பதற்கு பதிலாக ‘உரிமை மீட்பு கழகம்’ என மாற்றப்பட்டுள்ளது. முகவரியும் பசுமை வழிச்சாலைக்கு பதிலாக, நந்தனம் முகவரி கொடுக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஓபிஎஸ் சத்தமின்றி புதுக்கட்சியை தொடங்கிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. […]
திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் – ஓபிஎஸ்
மருது சகோதரர்கள் நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அஞ்சலி செலுத்தினார் அப்போது அவர் கூறியதாவது:-யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக அமைவது என்பது மக்களின் கைகளில்தான் உள்ளது. தமிழக மக்களின் நலனை எண்ணியே கூட்டணி அமைப்போம். இந்த தேர்தலுக்குள் பல புயல், சூறாவளி வீசக் கூடும். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிதறி கிடப்பதால் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக மக்கள் பேசி வருகின்றனர்.என்று தெரிவித்தார்
ஓபிஎஸ் தினகரனை கூட்டணியில் சேர்க்கவும் எடப்பாடி எதிர்ப்பு
மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தபோது.சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணியில் கூட சேர்க்க முடியாது” என்று பழனிசாமி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், “அப்படி எனில், தென் மாவட்டங்களில் அவர்களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்காமல் போகும். இது திமுக வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிடுமே. திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்காதா” என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு, “அவர்களிடம் சொல்லிக்கொள்ளும்படியாக வாக்கு வங்கி இல்லை.என்று எடப்பாடி […]
OPS, TTV க்கு அண்ணாமலைவேண்டுகோள்
பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனுக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்.
செங்கோட்டையனுக்கு ஓபிஎஸ் ஆதரவு
செங்கோட்டையன் இன்று எடப்பாடிக்கு எதிராக போர் கொடி தூக்கினார் கட்சியில் பிரிந்து சென்றவர்களை சேர்க்க வேண்டும் என்று அவர் கெடுவிதித்தார் இந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவு தருவதாக ஓபிஎஸ் கூறினார்
ஸ்டாலின் ஓபிஎஸ் திடீர் சந்திப்பு
முதலமைச்சர் ஸ்டாலினை இன்று ஓபிஎஸ் சந்தித்து பேசினார் ஸ்டாலின் காலையில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஓபிஎஸ் சும் அந்த வழியாக வந்தார்.அப்போது ஸ்டாலினுடன் நலம் விசாரித்துவிட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்.ஓபிஎஸ் இன்று அடுத்த கட்ட நடவடிக்கையை அறிவிப்பதாக இருக்கிறார்.இந்த நிலையில் அவர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பி உள்ளது தனிகட்சி தொடங்கப் போவதிவில்லை என்றும் ஓபிஎஸ் நேற்று அறிவித்திருந்தார்
விஜய் பக்கம் செல்லும் ஓபிஎஸ்
திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் அனுமதி கேட்டார் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது இந்த நிலையில் அவரது அரசியல் ஆலோசகரான பண்ருட்டி ராமச்சந்திரன் என்டிஏ ஒரு ஆபத்தான கூட்டணி என்று கூறியுள்ளார் அவர் மேலும் கூறியதாவது:-2026 தேர்தலில் தி.மு.க. – த.வெ.க. இடையேதான் போட்டி; விஜய் – ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்தால் அரசியலை நடத்த முடியும், தென்மாவட்டங்களில் அதுதான் பலம்” என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்