தாம்பரம் மாநகராட்சி இடம் மாற்றம் 43 கோடியில் புதிய கட்டிடம் உருவாகிறது

தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டினார் அமைச்சர் நேரு மழை பெய்யட்டும் ஏரிகள் நிரம்பட்டும் அப்படி என்றால் தான் சென்னையில் குடிநீர் தேவை பூர்த்தியாகும் அமைச்சர் பேட்டி தாம்பரம் மாநகராட்சியின் புதிய அலுவலகக் கட்டடம் ரூ.43.40 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி தாம்பரம் சனடோரியம் பகுதியில் நடைபெற்றது, ரூபாய் 43.40 கோடி மதிப்பீட்டில் 4.69 ஏக்கர் பரப்பளவில், ஒருலட்சத்து 34 ஆயிரம் சதுர அடியில், தரைத்தளத்தில் 100 கார்கள், 390 இருசக்கர வானங்கள் […]

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவ.-15ம் தேதி திறப்பு

சபரிமலையில் மகரவிளக்கு பூஜை 2025 ஜனவரி 14ம் தேதி நடைபெறும். 2024ம் ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் 15ம் தேதி திறக்கப்பட்டு டிசம்பர் 26ம் தேதி நடை சாத்தப்படும். மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி திறக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 20ம் தேதி கோயில் நடை அடைக்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ள அத்திக்கடவு – அவிநாசி நீர்ப்பாசன திட்டம் குறித்த காணொலியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு நீர்வளத்துறை

மேற்கு மாவட்டங்களின் 60 ஆண்டுகால கனவுத் திட்டம் இன்று நனவாகியுள்ளது!

மேடவாக்கத்தில் புதிய காவல் நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் மேடவாக்கம் புதிய காவல் நிலையத்தை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக் திறந்து வைத்தார். தாம்பரம் மாநகர காவல் எல்லை துவங்கப்பட்ட போது 20 காவல் நிலையங்கள் இருந்தது. அதன் பிறகு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு கிளாம்பாக்கம் காவல் நிலையம் புதிதாக திறக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக பள்ளிகரணை காவல் நிலையத்தை பிரித்து மேடவாக்கம் காவல் நிலையம் உருவாக்கப்பட்டு கோவிலம்பாக்கத்தில் மேடவாக்கம் காவல் நிலையத்தை தாம்பரம் […]

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் பா.கார்மேகம் பட திறப்பு விழா.!

குரோம்பேட்டை நெமிலிச்சேரியில் காங்கிரசின் மூத்த தலைவர் பா. கார்மேகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 85. அவரது திரு உருவ பட திறப்பு விழா குரோம்பேட்டைநெமிலிச்சேரியில் உள்ள முத்துசாமி நகர் மெயின்ரோட்டில் உள்ள முன்னாள் பல்லாவரம் நகரசபை உறுப்பினர் அவரது மூத்த மகன் G. செல்வகுமார் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி.செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் வி. ஆர் .சிவராமன்.தாம்பரம் […]

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளபிரமாண்ட கோயில் கட்டுமானங்களைப் பார்வையிடும் பிரதமர் மோடி பூஜையிலும் கலந்து கொண்டு வழிபடுகிறார்.

விமான நிலையத்தில் பாஸ்ட் ட்ராக் டாக்சி கவுண்டர் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வசதிகாக “Fast track” கால் டாக்சி புக்கிங் கவுண்டர் திறப்பு சென்னை விமான நிலையத்தில் “Fast track” கால் டாக்சி புக்கிங் கவுண்டர் திறப்பு, இதனால் விமான பயணிகள் ஆன்ராய்ட் ஆப் மூலமாகவும், சென்னை விமான நிலைய மேற்கு பார்க்கிங் கீழ் தளத்தில் நேரிடையாக பதிவு செய்து பயணம் செய்யலாம். பார்கிங்கில் என்னேரமும் 50 கும் மேற்பட்ட வாகனங்கள் தயாராக உள்ள படி செயல்படுவதாகவும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்டாக்சிகளுடன் இயங்கும் […]

உலகத்தரத்தில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட கலைஞர் நூலகம் திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்.

மதுரை: சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பழம்பெருமை மிக்க மாமதுரையின் புதிய மணிமகுடமாக உலகத்தரத்தில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழகத்தின் ஆளுமை மிக்க தலைவரான மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர், இந்தியாவில் அனைத்து அரசியல் தலைவர்களாலும் சிறந்த ராஜதந்திரி என போற்றப்பட்டவர். நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி. எழுத்து, பேச்சு, இலக்கியம் என பல்வேறு துறைகளில் தனக்கு நிகர் தானே என ஒளி வீசியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலைவரின் பெருமையை […]