சபரிமலையில் வரும் 11-ம் தேதி நடை திறப்பு..!

சபரிமலையில் இந்த ஆண்டு ஆடி மாத பிறப்புக்கு முன்பாக வரும் ஜூலை 11-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. மாளிகைபுரம் கோயிலின் இடதுபுறத்தில் இருக்கும் நவக்கிரக மண்டபத்தை வேறு இடத்தில் மாற்ற தேவப்பிரசன்னத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வேறு இடத்தில் நவக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதனால் கோயில் நடை 11-ம் தேதி திறக்கப்படுகிறது. 12-ம் தேதி நவக்கிரக பிரதிஷ்டை செய்யப்பட்டு 13-ம் தேதி கோயில் நடை அடைக்கப்படுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் சட்டமன்ற தொகுதியில், தாம்பரம் & வண்டலுர் இரயில் நிலையங்களுக்கு இடையில் இரயில்வே கடவு எண். 32க்கு பதிலாக பெருங்களத்தூர் இரயில் நிலையம் அருகில் இரயில்வே திட்டப் பணிகளின் கீழ் ரூ.60.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை

பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், தலைமையில் குறுசிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்தார். உடன் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி ஆணையர் சீ.பாலச்சந்தர், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டலக் குழு தலைவர்கள் து.காமராஜ், சு.இந்திரன், மாமன்ற […]

டிச.11 ஆம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும்!” – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

அனைத்து பள்ளிகளும் 11.12.2023 முதல் முழுமையாக செயல்படவும், அரையாண்டுத் தேர்வுகளை எவ்வித புகார்களுக்கு இடம் தராமல் திட்டமிட்டு நடத்திடவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகள் முழுவேலை நாளாக இயங்கும் என அரசு அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி தினமாக கொண்டாடப்படுவதால் நாளை பள்ளிகள் செயல்பட உள்ளது. காமராஜரின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை நடத்திடவும் உத்தரவு.

வாடிக்கையாளர்களே உஷார்.. ஜூலை மாதத்தில் இந்த சனிக்கிழமை மட்டுமே வங்கி திறந்திருக்கும்!

வங்கி ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை மட்டுமே திறக்கப்படும். அதைப்பற்றி முழுமையாக காணலாம். ஜூலை மாதத்தில் மீதமுள்ள மூன்று சனிக்கிழமைகளில் ஒரு சனிக்கிழமை மட்டுமே வங்கிகளில் வேலை செய்யும். அலுவலகக் காரணங்களுக்காக சனிக்கிழமையன்று வங்கிப் பணியை முடித்துக் கொண்டால், அது விடுமுறை சனிக்கிழமை அல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் வேலையை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். நாட்டில் உள்ள வங்கிகள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும். ஜூலை மாதத்தில் ஒரு ஐந்தாவது சனிக்கிழமை அதாவது […]