தொடர்ந்து உயரும் பெரிய வெங்காயம் விலை: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.44-க்கு விற்பனை

சென்னை: கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (செப்.15) நிலவரப்படி கிலோ ரூ.44-க்கு விற்கப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக காரீப் பருவ வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு, நாட்டின் மிகப்பெரிய வெங்காய சந்தையான நாசிக்கில் பெரிய வெங்காயம் வரத்து குறைந்துள்ளது. தமிழகத்தில் பெரிய வெங்காயம் குறைவாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் வெங்காயத் தேவைக்கு வெளிமாநிலங்களையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. நாசிக்கில் வரத்து குறைவாக […]

மருத்துவக் குறிப்புகள்

சின்ன வெங்காயத்தை உணவில் சேர்க்கும் பெண்களுக்கு கர்ப்பப்பையிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் உருவாகும் நீர்க்குமிழிகள் குணமாகும்

2024, மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

வெங்காயத்தின் விலை கணிசமாக அதிகரித்ததன் காரணமாக மத்திய அரசு நடவடிக்கை பிற நாடுகளிடமிருந்து வரும் கோரிக்கையின் அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் – மத்திய அரசு

வெங்காய விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

வெளிச்சந்தையில் உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் 1 கிலோ வெங்காயத்தை ரூ.30க்கு விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை. தேவை ஏற்பட்டால் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்- கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன்.

2 மாதத்திற்கு விலை குறைய வாய்ப்பில்லை

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது வெங்காயம் கிலோ ₹60-80 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உற்பத்தி பற்றாக்குறை மற்றும் பண்டிகை காலம் காரணமாக தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என்கின்றனர் நிபுணர்கள். காரீஃப் வெங்காயம் மொத்த சந்தைகளுக்கு டிசம்பர் மாதம் தான் வர உள்ளது. அதனால், குறைந்தது 2 மாதங்களுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்து காணப்படும் என தெரிகிறது.

உணவில் நீரிழிவு நோயாளிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்

உடலில் கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை அளவு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். எனவே, நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நீரிழிவு நோயைத் தவிர்க்க உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஆரோக்கியமான உணவு தேவை. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் சேர்க்க வேண்டும்.வெங்காயத்தையும் சேர்க்கலாம். வெங்காயம் இந்தியாவில் மிக எளிதாகக் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும். இது கிட்டத்தட்ட எல்லா உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வெங்காயத்தில் சுமார் 44 கலோரிகள் […]

சென்னை கோயம்பேட்டில் சின்ன வெங்காயம், இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.60 உயர்வு

நேற்று மொத்த விற்பனையில் கிலோ ரூ.140க்கு விற்ற நிலையில், இன்று ரூ.200ஆக அதிகரித்தது. தக்காளி விலை இன்றும் கிலோவுக்கு ரூ.100 என விற்பனை. விலையில் மாற்றம் இல்லை. இஞ்சி கிலோ ரூ.260க்கும், பூண்டு கிலோ ரூ.180க்கும் விற்கப்படுகிறது.