டெல்லி: நாடு திரும்பினார் வினேஷ் போகத்

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இறுதிச்சுற்றில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத் நாடு திரும்பினார் பாரிஸில் இருந்து டெல்லி திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போஹத் டெல்லி விமான நிலையத்தில், வினேஷ் போஹத்திற்கு உற்சாக வரவேற்பு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய வினேஷ் போஹத், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால், பதக்க வாய்ப்பை இழந்தார் உணர்ச்சிவசப்பட்ட வினேஷுக்கு ஆறுதல் கூறிய சாக்‌ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா

தமிழக ஒலிம்பிக் வீரர்களை உற்சாகப்படுத்த தாம்பரத்தில் மினி மாரத்தான்

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை உற்சாகப்படுத்தும் நோக்கில், ஸ்போர்ட்ஸ் கிளப் ஆஃப் தாம்பரம் சார்பில் சென்னை மேற்கு தாம்பரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. 2024 ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், சந்தோஷ், ராஜேஸ் ரமேஷ், வித்யா ராமராஜ், சுபா வெங்கடேஷ், நேத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக, மாரியப்பன், துளசிமதி, […]

துப்பாக்கிச்சுடுதலில் இந்தியாவிற்கு வெண்கலம்

பாரிஸ் ஒலிம்பிக்: ஆடவர் 50 மீட்டர் (3P) ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய வீரர் முதல் பதக்கம் பெற்று சாதனை.

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்களின் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ், பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ் ஆகியோர் இந்திய தடகள அணியில் இடம்பிடித்தனர் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வருகிற ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது

லாஸ் ஏஞ்சல்சில் 2028ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு

கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்பட 5 போட்டிகளை சேர்ப்பதாக ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு 1900ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கடைசியாக கிரிக்கெட் விளையாடப்பட்டது. 128 ஆண்டுகள் கழித்து ஒலிம்பிக்கில் டி20 கிரிக்கெட் விளையாடப்பட உள்ளது. பேஸ்பால், ஃபிளாக் கால்பந்து, ஸ்குவாஷ், லாக்ரோஸ் ஆகிய விளையாட்டுகளும் சேர்ப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க பரிந்துரை

2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டு கமிட்டி பரிந்துரை அளித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் தந்தால் 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்குவாஸ் உள்ளிட்ட போட்டிகளும் சேர்க்கப்படவுள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.