சென்னை ஐஐடி-க்கு நன்கொடையாக ரூ.228 கோடி வழங்கிய முன்னாள் மாணவர்: `வசதியான வாழ்க்கையை தந்ததற்கு கைமாறு’ என உருக்கம்

சென்னை: சென்னை ஐஐடி-க்கு முன்னாள் மாணவர் ஒருவர் ரூ.228 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளார். தனக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்தித் தந்த கல்வி நிறுவனத்துக்கு தான் செய்யும் கைமாறு என்று அவர் உருக்கமுடன் கூறினார். சென்னை ஐஐடியில் கடந்த 1970-ம் ஆண்டு எம்டெக் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி படித்தவர் கிருஷ்ணா சிவுகுலா, தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவர், இந்தோ – எம்ஐஎம் லிமிடெட் மற்றும் சிவா டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இவர் தான் படித்த சென்னை ஐஐடிக்கு ரூ.228 […]